பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

13

அருள்நெறி முழக்கம்


கண்ணன் நல்லவர்களைத்தான் காப்பான். அல்லவர்களை நிச்சயமாக வெறுத்து ஒதுக்கித் தண்டிப்பான் - இன்னலுக்கு உள்ளாக்குவான். தவறு செய்கின்ற மக்களைத் தாங்களே தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்திவிடச் செய்வதுதான் கண்ணனின் வேலை என்று நமக்கு வரலாறு காட்டுகின்றது. கம்சனுக்கும் இரணியனுக்கும் அவன் கொடுத்த தண்டனைகள் மூலம் நாம் இதனை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. இதனால் கண்ணன் கொலைகாரன் என்று மக்கள் சிலர் கருதுகின்றனர். புரிந்துகொள்ளாப் பகுத்தறிவுக் கூட்டத்தினர், இல்லாத வேண்டாத சில கேள்விகளை எழுப்பிக் காலத்தை வீணாக்குகின்றனர்.

அன்புடைத் தோழர்கள் கேள்விகேட்கும் முன்னர் வாழ்க்கை வரலாறுகளை நன்கு படித்துணர்ந்து பார்த்தால் நலம்பயக்கும் என்று கருதுகின்றேன்.

கண்ணன் கொலைகாரன் என்று அவர்கள் கருதியதோடன்றி நாளடைவில் மேடைகளில் பேசவும் எழுத்துக்களில் எழுதவும் முற்பட்டு விட்டனர்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று கூறுகின்ற இந்நாளிலே - ஜனநாயக அரசிலே - கொள்ளைக்கும் களவிற்கும் இடம் கொடுக்க முடியுமா? அது உரிமையாகுமா? ஜனநாயகச் சட்டப்படி அது சரியாகுமா? இன்றைய நாட்டின் நிலைமையை வைத்துக் கண்ணனின் சரிதையைப் படித்துணர்ந்து பார்த்தால் கண்ணன் நம்மை எல்லாம் வாழ்விக்கும் கடவுள் என்று நன்கு விளங்கும்.

நாட்டில் தீமைகள் மலிந்து இருப்பதைக் கண்ட கண்ணன் தீமைகளை அகற்றத்தான் அவ்வாறு செய்தான் என்பது உண்மைக் கண்கொண்டு பார்க்கின்ற தோழர்களுக்கு நன்கு தெரியும், தீயன தானாக வளரும் என்பது உலகில் நாம் காண்கின்ற உண்மை; எனினும் தீமைகளைக் களைந்தெறியாவிட்டால் நாளடைவில்