பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

20

அருள்நெறி முழக்கம்


சொத்துக்கள் அனைத்தும் மக்கட் சமுதாயத்தின் நலங்கருதித்தான். ஆலயங்களில் செலவிடும் பொருள்கள் அனைத்தும் வீண் என்று சிலர் கருதுகின்றனர் கூறுகின்றனர் - எழுதுகின்றனர். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால்தான் அதன் உண்மைப் பொருள் விளங்கும். ஆலயங்களின் பெயரால் செலவிடப்படும் பொருள்கள் அனைத்தும் மக்களின் நலனுக்காகத்தான் செலவிடப்படுகின்றன. தவறான எண்ணத்தில் - குறுக்கு எண்ணத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டு நோக்காமல் உண்மைக்கண்கொண்டு நோக்கினால்தான் அவைகளை வீண் என்று கருதாமல் நீலம் என்று என்று எண்ணத் தோன்றும், மாற்று எண்ணம் கொண்டவர்கள் கூறுகின்றபடி அங்கு ஒன்றும் வீணாகச் செலவிடப்படவில்லை என்பதைக் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றோம். ஆலயங்களைப் பற்றியும் அங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றியும் நல்லறிவு படைத்த பெருமக்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.

சிவபெருமானும் - திருமாலும் போட்டியில்லாத - மக்கள் விரும்பாத பொருள்களைத்தான் தமக்கெனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இதிலிருந்து நாமறியும் நீதிகள் பலவாம். மக்கட் சமுதாயத்தில் ஒருவர் விரும்புகின்ற ஒன்றினை மற்றவர் விரும்பக் கூடாது. விரும்பினால் நாட்டில் போட்டியும் பொறாமையும்தான் வளரும். ஆதலால் நாட்டினில் நாம் எவரும் விரும்பாத போட்டி, பொறாமை வளரத் துணைசெய்யாத ஒன்றினைத்தான் ஏற்றுக்கொள்ள விரும்புதல் வேண்டும். இதன்மூலம் மக்கட் சமுதாயம் உள்ளத்தைப் பண்படுத்திக் கொள்ளல் வேண்டும். இப்படிப்பட்ட தத்துவங்களைப் புரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ள மனம் இல்லாமல் அவைகளைப் பற்றிக் குறைகூறுதனால் யாருக்கு என்ன பயன்?

கண்ணனை நினைக்கும் பொழுது சேவையை நினைத்துக் கொள்ளுங்கள். தீயனவற்றை ஒதுக்கி நல்லனவற்றை வளர்க்கும் அவன் தன்மையை உணருங்கள். எளியார்ககும் எளியன் அவன். தொண்டர்க்கும் தொண்டன் அவன். மக்கட் சமுதாயம் கண்ணனை