பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

53

அருள்நெறி முழக்கம்


வளமை என்ற வேறுபாடே கண்டதில்லை. கண்டிருக்கவும் முடியாது. காரணம் அன்றைய மக்களும் நாடும் வளமைக் கோட்டிலேயே வாழ்ந்து வந்தமையே.

இன்று எங்கு நோக்கினும் இந்த வேறுபாட்டுக் குரலைத்தான் கேட்க முடிகின்றது. நாட்டின் வளம் அத்தகு நிலைமைக்கு மாறி விட்டது. மக்கள் பல்வேறுபட்ட திக்கை நோக்கி ஒடிக் கொண்டிருக்கின்ற காரணத்தால் அவர்களிடம் வெறியும் வெறுப்புணர்ச்சியும் வளரத் தலைப்பட்டன.

இனவெறி மக்கட் சமுதாயத்தைக் கெடுக்கும் நஞ்சு. அதனை மக்களிடம் பரப்புதல் கூடாது. பரப்புவதும் தவறு என்பதை உணர்ந்து தக்க காலத்தில் தமிழ் மொழியின் பெயரால் தமிழினத்தின் நலங்கருதித் தோன்றியது தமிழரசுக் கழகம். வேறுபட்ட கருத்துக்களைப் பரப்பியதால் மக்கள் சிந்தனையை இழந்ததால் தவறான பாதையில் செல்லத் தலைப்பட்டனர். மக்களின் வாழ்வைப் பொருத்துத்தான் நாட்டின் போக்கும். அதனைப் போலவேதான், நமது மனம் மாறுபட்ட பல கருத்துக்களைப் பின்பற்றியதால்தான் நாட்டிலும் பல தவறான செயல்கள் நடக்கத் தொடங்கின.

தமிழ் மொழி - தமிழினம் - தமிழ் நாகரிகம் - தமிழ்க் கலாசாரம். தமிழர் பண்பாடு - அருள்நெறி - அன்பு நெறி சமரச சன்மார்க்க வழி - கடவுள் வழிபாடு முதலியவற்றிற்கெல்லாம் தமிழின் பெயராலும் தமிழ் இலக்கியத்தின் பெயராலும் ஊறு விளைவிக்க முற்பட்டார்கள் சிலர். மக்கள் மனதில் இத்தகு தவறான செயல்கள் இடம் பெறுமேயானால் நாட்டின் போக்கைச் சீர்கேடான நிலையில்தான் கொண்டுவந்து முடிக்குமென்பதை அறிந்த தமிழ்ச் செல்வர் - காலம் அறிந்த அறிஞர் ம.பொ.சி. அவர்கள் தமிழரசுக் கழகத்தை ஏற்படுத்தினார்கள்.

இன்றைய இளைஞர்கள் மொழியின்மேலுள்ள ஆர்வத்தால் தவறான சில செயல்களுக்கு ஆளாக முற்பட்டனர்.