பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

56

அருள்நெறி முழக்கம்


முனைந்தால் உறுதியாகத் தமிழ்மொழி ஆளுகின்ற மொழியாக மாறிவிடும். இம்முயற்சியில் ஒவ்வொரு தமிழனும் ஈடுபட வேண்டும்.

தமிழ்நாடு, தமிழ்மொழியென்று பேசுவதால் எழுதுவதால் பயனொன்றுமில்லை. அதன் வளர்ச்சி குறித்து ஆக்க வேலையின் முனைய வேண்டும். அந்தத் தாரக மந்திரச் சொற்கள் உள்ளக் கிளர்ச்சியை உண்டு பண்ண வேண்டும். கடவுள் நெறியின் அடிப்படையில் வாழுகின்ற நம்மிடம் சமயப் பற்று வளம் பெற வேண்டும். சிறந்த இலக்கியங்களும் இலக்கணங்களும் ஒருங்கே அமையப் பெற்றது தமிழ் மொழி ஒன்றுதான். இன்றைய இளைஞர்கள் அனைவரும் தமிழ்மொழிப் பற்றுடையவராய் இருப்பது போல் சமயப் பற்றுடையராயுமிருத்தல் வேண்டும்.

குறிப்பாகச் சொல்லப் போனால் தமிழர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டிய ம.பொ.சி யைப் பின்பற்றுகின்ற தமிழரசுக் கழகத்தாரிடம் சமயம் நன்கு வளம் பெற வேண்டும். அதற்கு இவர்கள் ஆவன செய்ய முனைய வேண்டும். “இந்நாட்டில் தமிழரசுக் கழகம் இருக்கும்வரை தமிழும் சமயமும் ஓங்கி வளரும். அதற்கு மாறானவர்கள் இங்கு வாழ வழியில்லை” என்ற சூழ்நிலை உண்டாதல் வேண்டும்.

இளங்கோவடிகள் நமக்கு ஒப்பில்லாத சிலப்பதிகாரத்தைத் தந்தார். அந்த உயரிய நூல் தமிழர் பண்பாட்டையும் அரசியலையும் நன்கு விளக்கிக் காட்டுகின்றது. அத்தகு இலக்கியங்களை மக்கள் படித்து நன்குணர வேண்டும்.

ஜாவா, சுமத்ரா போன்ற நாடுகளையும் தன்னகத்தே கொண்டிருந்த தமிழகம் இன்று தமிழ்நாட்டின் எல்லையைக் காக்க முடியாமல் தவிக்கின்றது. தமிழரசுக் கழகத்தார் இலக்கிய விழா எடுப்பது வரவேற்கத்தக்கதுதான். விழாக்கள் எடுப்பதுடன் சமயப் பற்றும் தமிழ்ப்பற்றும் வளம் பெற்றவர்களாக வாழ்ந்தால் நலம் பயக்கும். ஒவ்வொரு இளைஞனும் தமிழ்ப்பற்றும் தெய்வப்பற்றும்