பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

72

அருள்நெறி முழக்கம்


“அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல

அறத்தினால் வருவதுதான் தலைசிறந்த இன்பம். அதனால் வரும் புகழ்தான் புகழ் என்று வற்புறுத்திக் கூறுகின்றார்.

திருவள்ளுவர் ஒப்பற்ற நாகரிகத்தைப் பேசுகின்றார்.

“பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”

நாகரிகம் என்ற சொல் இன்று மிக எளிமையாகி விட்டது. ஆனால் வள்ளுவர் நஞ்சூட்டுவார்க்கும் நல்லருள் பொழியும் உளப் பண்பை “நாகரிகம்” என்ற சொல்லாற் குறிப்பிடுகின்றார்.

சில சமயங்களிலே சிறந்த சிறுகதை ஆசிரியராகத் திருவள்ளுவர் காட்சியளிக்கின்றார். நம்மேல் ஒருவர் பொறாமை கொண்டு நஞ்சு வைத்து விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்; ஏன்? சாக்ரடீசுக்குக் கிடைத்தது. அதுதானே? நாம் அதை உண்ண வேண்டுமாம்! அப்படி எண்ணாது உண்ண வேண்டுமாம். எப்பொழுதும் வள்ளுவர்க்கு உள்ளத்தில் ஒரு பற்று. ஆகையால் நஞ்சு என்று எண்ணாதே. அப்படி எண்ணினால் உன்னுடைய முகம் பேசும் என்ன இருந்தாலும் வெறுப்புணர்ச்சி தோன்றினால் முகம் அதனை எடுத்துக்காட்டும் அல்லவா? ஆகையால் நஞ்சு என்று எண்ணினால் அந்த நினைவை முகம் எடுத்துக்காட்டிவிடும். அப்பொழுதும் நம்முடைய முகத்தை நஞ்சு வைத்தவர் பார்த்து விட்டால் வருத்தப்படுவார். அந்த வருத்தத்தைக் கூட அவனுக்குக் கொடுக்காதே என்று சொல்லுகின்றார்.

நஞ்சுண்டமைந்தவர் இந்த நாட்டிலேதான் உண்டு. நஞ்சுண்டு இறந்தவரைத் தான் பிறநாடுகளிலே கேள்விப்பட முடியும். சாக்ரடீஸ் நஞ்சுண்டு மாண்டார். உடனே, அவருடைய தொண்டர்கள் உண்மையைக் கொன்று விட்டார்கள் என்று வருத்தப்பட்டார்கள். ஆனால் நம் நாட்டிலே திருநாவுக்கரசர்