பக்கம்:அறவோர் மு. வ.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

97

உன்னைப்போல பயந்து நடப்பார்கள் என்று கனவு காண்கிறாயோ ?” என்றாள்.

இது அகல்விளக்கின் கதைத்தலைவன் 'சந்திரன்’ குறித்தும், சமுதாயச் சூழல் குறித்தும் கிழவன், கிழவி. இருவர் உரையாடுவதாக அமைந்த உரையாடல். இந்த உரையாடலில் பாமரமக்களின் மனப்போக்கிற்கு ஏற்ற வண்ணம் சொற்களைக் கையாண்டு சமுதாயத்தின் நிலையைப் பிரதிபலித்துள்ளார் டாக்டர் மு. வ.

பாமரர் நடையில் உள்ள உயிரோட்டத்தைக் காட்டியுள்ளதைப்போல், படித்தவர் நடையில் அமைந்த பிற மொழி விரவல் தன்மையைப் பாத்திரங்களின் நடையில் காட்டியுள்ளார். (அகல்விளக்கு-வேலய்யன்). குறிக்கோள் பாத்திரங்களாகப் படைத்துள்ள அறவாழி, அருளப்பர் போன்ற நடையில் மேற்கோள் நடையையும் காண முடிகிறது. எளிமை, தெளிவு, திட்டம், நுட்பம் சார்ந்த நடையாலே டாக்டர் மு.வ.வின் கலைப்படைப்பு செம்மை பெற்றுள்ளது. உவமை, உருவகம் போன்ற இலக்கியக் கூறுகள் சார்ந்த நடையை ஆசிரியர் நடையிலும் பாத்திரங்களின் நடையிலும் அமைத்து, தனித்தன்மையும், படைப்புக்கு உயிர்ப்புத்தன்மையும் உருவாக்கியுள்ளார். சொல்லாட்சிகளைப் பயன்படுத்துவதிலும், குறியீடுகளைப் (Punctuation) பயன்படுத்துவதிலும், சில நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளமை ஆழ்ந்து நோக்கத்தக்கதாகும். இலக்கணப் பார்வையிலிருந்து குறிக்கும்போது, ஒரு, ஓர்அல்ல அன்று, இவைகளைப் பயன்படுத்தும்போது, இலக்கண நெறிகளுக்குச் சிறப்பிடம் அளிக்காமல், மக்களின் வழக்குத் தன்மைக்கு ஏற்றவாறு படைப்பிலக்கியங்களை உருவாக்கியுள்ளார். சமுதாயம், கருத்து என்ற கோணத்தில் நடையை அமைத்துப் படைப்பிலக்கியத்தில் வெற்றி கண்டுள்ளார். தமிழ் உரைநடை வரலாற்றிலே மறைமலையடிகள், திரு.வி.க., அறிஞர் அண்ணா ஆகியோருக்குத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/100&oldid=1224100" இலிருந்து மீள்விக்கப்பட்டது