பக்கம்:அறவோர் மு. வ.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

அறவோர் மு. வ.

தனித்தனியான முத்திரையிருப்பதைப்போல் டாக்டர் மு.வ. விற்கும் சிறப்பிடம் உண்டு. படிக்கத்தூண்டும் எளிமை, தெளிவு, திட்பம் இம்மூன்றுமே டாக்டர் மு. வ. வின் நடைச்சிறப்பாகும். படைப்பாளர் என்பவர் காலத்தின் எதிரொலியாக விளங்குபவர். டாக்டர் மு. வ. இருபது நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களின் தாக்குரவைப் பெற்றவர். ஆனால் மரபுவழிப்பட்ட சிந்தனைகளுக்கே தாம் ஒரு முகவர் என்று கருதாமல், நவீன இலக்கிய வடிவத்தில் சமுதாயத்தைச் சிந்தித்தது குறிப்பிடத் தகுந்ததாகும். 'நாட்டில் நிலவும் அரசியல் கொந்தளிப்பிலோ. சீர்திருத்த வேகத்திலோ ஈடுபடாமல் அமைதியாக ஒரு மூலையில் இருந்து மக்களின் வாழ்க்கையைக் கண்டு உணர்ந்து அந்த அடிப்படையைக் கொண்டு கதைகள் எழுதுவோர் உண்டு. உண்மையை நோக்கினால் அரசியல் கொந்தளிப்பு, சீர்திருத்த வேகம் முதலியவை சமுதாயம் என்னும் கடலின் மேற்பரப்பில் காணும் அலைகளும் ஆரவாரங்களும் ஆகும். குமுறும் கடலின் அடிப்பகுதி பெரும்பாலும் அமைதியாக இருப்பது போலவே சமுதாயத்திலும் குடும்ப இன்ப துன்பம் முதலியவை என்றும் போல் உள்ளன. அவற்றைக் கண்டு உணர்ந்து சொல்லோ வியமாக்கித் தரும் கலை உள்ளம் சிலர்க்கு இயல்பாக அமைகிறது' (தமிழ் இலக்கிய வரலாறு, ப. 291) என்னும் அவர்தம் கூற்றுக்கிணங்க டாக்டர் மு.வ. சமுதாயத்தின் மேற்பரப்பிலிருந்து அடிப்பகுதியின் சிக்கல்கள் வரை - தம் படைப்புகளில் கருப்பொருளாகவும் கருத்துப்பொருளாகவும் ஆக்கிக் கலைப்பாங்கோடு வழங்கியுள்ளார். அவர்தம் புதுமைச் சிந்தனைகள் புதியதொரு சமுதாயப் பார்வை கொண்டதாய் அமைந்துள்ளன. காலத்திற்கேற்றாற்போல் மனிதனின் வாழ்க்கை முறைகள் மாற்றம் காண வேண்டும்; அந்நிலைக்குத் தடையாக மரபு, பண்பாடு என்பவை விளங்கினால் அவற்றை உடைத்தெறிவதில் தவறில்லை என்று கருதினார். அந்நோக்கில் தம் கருத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/101&oldid=1224108" இலிருந்து மீள்விக்கப்பட்டது