பக்கம்:அறவோர் மு. வ.pdf/12

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
9
 
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் மிகப் பழைய தொகை நூல்களின் பாடல்களைப் பற்றி ஆராய்ந்து ஆழ்ந்த நுட்பங்களையும், நயமான கருத்துகளையும், விளக்கி நூல்களை எழுதியவர்கள் கி. வா. ஜகந்நாதன், தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், இலக்குவனார், வேங்கடராம செட்டியார், கு. ராஜவேலு, அ. ச. ஞான சம்பந்தன், மு. வரதராசன், போ. குருசாமி, ந. சஞ்சீவி முதலானோர்.
- தமிழ் இலக்கிய வரலாறு, பக். 331
கடிதம் எழுதும் வடிவில் பல அருமையான கருத்துக்களை விளக்க நூல்களாகத் தரும் எழுத்தாளர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணைபுரிந்துள்ளனர். அறிஞர் அண்ணா, மு. வரதராசன் முதலானவர்களின் நூல்கள் இவ்வகையில் மக்களிடையே நன்கு பரவியவை.
- தமிழ் இலக்கிய வரலாறு, பக் 332

இப்படிப் பல்வேறு துறைகளிலும் கற்றுத் துறைபோகிய போதும் தமக்கெனத் தனியிடம் வைத்துக் கொள்ளும் ஆர்வலராய் அல்லாமல் பிறரோடு தம்மையும் ஒருங்கு வைத்து எண்ணும் பரந்த மனப்பான்மை கொண்ட அறவோராக மு.வ. அவர்கள் துலங்குவதைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மேலும் காந்தியார் குண்டுபட்டு இறந்து, பொதுமக்கள் பார்வைக்கு அவர் திருவுடலம் வைக்கப்பட்டிருந்த நிலையில் செய்தித்தாளில் வெளிவந்த அப்படத்திற்குக் கண்ணாடிச் சட்டமிட்டு வைத்திருந்ததும், அவ்வாறு வைத்திருந்தமைக்கு அவர் கூறும்,

"அறம் வளர்த்த பொதுநலம் பேணிய நாட்டின் தந்தைக்கே இந்நிலை; எனவே வாழ்வில் ஒவ்வொருவரும் அயராது தம் வாழ்நாளில் ஒவ்வொரு நாளிலும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/12&oldid=1237225" இருந்து மீள்விக்கப்பட்டது