பக்கம்:அறவோர் மு. வ.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

13


நாவல் இலக்கியத்துறையை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது.”
-மு.வ. வின் இலக்கியங்கள், பக். 23
"தம்முடைய நாடித்துடிப்பை மட்டுமன்றித் தமிழ்ச் சமுதாயத்தின் நாடித்துடிப்பையும் அவர் நன்கு உணர்ந்தவர். இது இயற்கையாக இயங்காததற்குச் சமுதாய நோய்களே காரணம் எனத் தெளிந்து, நோயைக் கண்டறிந்து அவர் தந்த மருந்துச் சீட்டுகளே (Prescriptions) அவர் எழுதிய நாவல்களாகக் காணப்படுகின்றன. தம்முடைய இதயம் தம்மிடம் பேசிய பேச்சைக் குறித்துவைத்து நாவலாக்க இயற்கை ஒத்துழைக்காவிட்டாலும், தாம் உணர்ந்த சமுதாயத்தின் பேச்சைக் குறித்துவைத்து நாவல் வடிவில் வெளியிட இயற்கை அவரைத் தடுக்கவில்லை"
-மு.வ. வின் இலக்கியங்கள், பக். 23 - 24

என்று டாக்டர் இரா. தண்டாயுதம் அவர்கள் நாவல் துறையை அவர் தேர்ந்தெடுத்தமைக்கான காரணத்தை விளக்குகின்றார். நாவல் துறையை மட்டுமன்றிப் பிற இலக்கியத் துறைகளை அவர் தேர்ந்தெடுத்தமைக்கும் இவர் கூறும் காரணமே பொருந்தும்.

தாம் உணர்ந்த-உணர்த்த விரும்பிய வாழ்க்கை உண்மைகளை-அறங்களைத் தாம் படைத்த இலக்கிய மாந்தர்களின் வாயிலாகவே உணர்த்துகின்றார். மு.வ. கருத்துக்களையே பாத்திரங்களாகப் படைத்துள்ளார்’ என்பர் டாக்டர் க. கைலாசபதி. டாக்டர் இரா. மோகன் அவர்கள்,

"டாக்டர் மு.வ.வின் எழுதுகோலிலிருந்து கருத்துக்களால் ஆன சில பாத்திரங்கள் உருவாகியுள்ளன என்பது உண்மை. அந்தப் பாத்திரங்கள் எலும்பும் தசையும் கொண்டு ஆக்கப்பட்டன அல்ல. மனித
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/16&oldid=1236295" இலிருந்து மீள்விக்கப்பட்டது