பக்கம்:அறவோர் மு. வ.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அறவோர் மு. வ.


சிந்தனையின் பிரதிநிதிகளாகவே படைக்கப்பட்டன என்பது உண்மை. அறவாழி (அல்லி, நெஞ்சில் ஒரு முள்), முருகய்யா (கள்ளோ காவியமோ, வாடாமலர்), மெய்கண்டார் (மண்குடிசை) ஆகிய பாத்திரங்களை மு.வ. மனித சிந்தனையின் பிரதிநிதிகளாகவே படைத்துள்ளார். எனினும் இங்கே நாம் ஓர் உண்மையை மறந்து விடுதல் கூடாது. அந்தப் பாத்திரங்களில் மு.வ. வின் நாவல்களில் தலைமைப்பேறு இல்லை. அறிவுரை கூறும் பொறுப்பே உண்டு"
-டாக்டர் மு.வ. வின் நாவல்கள், பக். 84

என்பர். இவர் கூறுவது போன்றே டாக்டர் மு. வ. அவர்கள் கதைத் தலைவர்கள், துணைவர்கள் என்று பலர் வாயிலாகத் தம் கருத்துகளை அறிவுறுத்தியதோடு அமையாமல் அறிவுரை கூறுவதற்கென்றே சில மாந்தர்களைப் படைத்துள்ளார். இம்மாந்தர்களின் நூல்களைப் பயின்றும் சான்றோர் வாழ்க்கையைக் கண்டும் இப்படித் தான் வாழவேண்டும் என்று நெறி வகுத்துக் கொண்டவர்கள். அறத்தில் அசையாத நம்பிக்கை உடையவர்கள். தனிநாயக அடிகளார் அவர்களும் டாக்டர் மு.வ. வின் கதைமாந்தர்களை அவர்களின் கருத்துகளாலேயே நினைவில் கொள்ள முடியும் என்கின்றார்.

"வரதராசன் புனைகதைகளில் கருத்துகளும் கலந் துரையாடல்களுமே தலைமை இடம் பெறுகின்றன. கதைமாந்தரின் ஆளுமையையே மறையச் செய்யும் அளவிற்குக் கருத்துக்கள் அவரது நாவல்களில் முதன்மை இடம் பெறுகின்றன... அவரது பாத்திரங்களை நாம் அவரவர்களின் மனிதப் பண்பால் நினைவில் கொள்ள முடியாது. அவரவர்களின் கருத்தாலேயே நினைவில் கொள்ள முடியும்."
-தனிநாயக அடிகள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/17&oldid=1236294" இலிருந்து மீள்விக்கப்பட்டது