பக்கம்:அறவோர் மு. வ.pdf/18

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
15
 

இப்படியாக இலக்கிய வடிவங்களில் அவர் உணர்த்தும். உண்மைகள் - கருத்துகள் உலகத்தைச் சீர்திருத்தும் கீர்த்தி வாய்ந்தன. நாட்டிற்கு நன்மை பயக்கும் நீர்மையன. சமுதாயத்திற்கு நலன் நல்கும் பெற்றின. அமைதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆற்றல் சான்றன. தனி மனிதனை நெறிப்படுத்தும் பாங்கின.

குறையும் நிறையும்

டாக்டர் மு.வ அவர்களின் உள்ளம் புதிய உலகம் காண விழையும் உள்ளம். அவர்தம் சிந்தனை உலகளாவிய சிந்தனை. எனவேதான் உலகத்தில் உள்ள குறைகளை மட்டும் சுட்டிக் காட்டுவதோடு அமைந்துவிடாமல் அக்குறைகளை நிறைகளாக்கவும் வழி தேடுகிறார். மூடநம்பிக்கையும் ஆடம்பரமுமே உலகில் காணப்படும் குறைகள் எனக் கருதுகின்றார்.

'உலகத்துக்கே பொதுவான குறைகள் இரண்டு உள்ளன. மூடநம்பிக்கை ஒன்று. ஆடம்பரம் ஒன்று'.

-மண்குடிசை, பக் 221

எனவேதான் அவர் ஆடம்பரத்தையும் மூடநம்பிக்கைகளையும் வெறுக்கின்றார். ஆடம்பரமாக வாழ்வதே பாவம் என்பது அவர் கருத்து.

"நம்மைச் சுற்றிலும் ஏழைகள் உணவுக்கும் உடைக்கும் வழியில்லாமல் வாழும்போது நாம் ஆடம்பரத்தைத் தேடுவது பாவம் என்பது என் கொள்கை. அவர்களுக்குப் பணம் கொடுத்து உதவி செய்யாவிட்டாலும் ஏக்கம் உண்டாக்கி மனத்தைக் கெடுக்காமலிருக்க வேண்டும். தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வது என்றைக்கும் நல்லது. அதுவே முதன்மையான தவம். கவலை இல்லாமல் வாழ்வதற்கு ஒரு வழி வேண்டாமை அன்ன விழுச் செல்வம் என்கிறார் திருவள்ளுவர். தேவையே
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/18&oldid=1236298" இருந்து மீள்விக்கப்பட்டது