பக்கம்:அறவோர் மு. வ.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

17


விபசாரம், கொள்ளை, கொலை முதலியன ஒரு சிலரைத் தான் அழிக்கின்றன. ஆனால் ஒரு சிலருடைய ஆடம்பர வாழ்க்கை எத்தனையோ ஏழை மக்களின் அமைதியான வாழ்க்கையைப் பாழ்படுத்தி அல்லல் விளைவிக்கின்றது.”
-தங்கைக்கு, பக். 36

ஆடம்பரம் தடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பது டாக்டர் மு. வ. அவர்களின் கருத்து.

"ஏழை மக்களின் வாழ்க்கையை நிலையை உயர்த்துதல் உணவு, உடை, தொழில், கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளை எல்லோர்க்கும் அமைத்துத் தருதல் இவைகளைச் செய்யக் காலம் ஆனாலும் ஆகட்டும். போட்டிக்கும் பூசலுக்கும் குறைகளுக்கும், குற்றங்களுக்கும் வழி அமைத்துத் தருகின்ற இந்த ஆடம்பரங்களையாவது தடுக்கலாமே! இதற்கு ஒரு சட்டம் பிறப்பிக்க ஒருவர் துணிைவாரானால் அவரைத்தான் நாட்டின் முதல் தொண்டர் என்று நான் போற்றுவேன்."
-தங்கைக்கு, பக். 37

ஆடம்பரப் போக்கினை விரும்புதலே உண்மையான பிற்போக்கு என்று மொழிகின்றார்.

"எந்த அளவிற்கு ஆடம்பர ஏணியில் ஏறி நிற்க முடியும் என்றுதான் பெண்கள் முயல்கின்றார்கள். ஆடம்பரப் போக்கு இல்லை என்று எண்ணும் தாழ்வு மனப்பான்மை பெண்கள் பலரிடம் இயல்பாக உள்ளது. இதுதான் உண்மையான பிற்போக்கு என்பது என் கருத்து."
-தங்கைக்கு, பக். 38.

உலகில் உள்ள மற்றொரு குறை மூடநம்பிக்கை. இந்த மூடநம்பிக்கையையும் வெறுக்கின்றார் டாக்டர் மு. வ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/20&oldid=1236304" இலிருந்து மீள்விக்கப்பட்டது