பக்கம்:அறவோர் மு. வ.pdf/22

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
19
 


சிக்குண்டவர்கள்... இனி அவர்களை அந்தக் கடலில் தத்தளிக்கவிடும் கொடுமை இருக்காது. பொருட் போராட்டம் ஒழிந்து அறப்போராட்டம் ஒன்றே நிற்க வேண்டிய அமைப்பே புத்துலக அமைப்பாகும்."
-அரசியல் அலைகள், பக். 116 - 117

இப்படித் தாம் காண விழையும் புதிய உலகத்தின் அமைப்பை வெளிப்படுத்துவதோடு மட்டும் அமைந்து விடாமல் அந்தப் புத்துலக உருவாக்கத்திற்குரிய வழியினையும் கூறிச் செல்கின்றார்.

"ஆகவே இன்று அறிஞர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமை தனிமனிதரைத் திருத்துவது அல்ல; சமுதாயத்தைத் திருத்துவதே ஆகும். பொருட்பற்றைப் போக்குவது அல்ல, பணவேட்டையைப் போக்குவதே ஆகும்."

-அறமும் அரசியலும், பக். 49.

இந்த உருவாக்கமும் உடனே செயலாக்கம் பெறும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. அது படிப்படியாகத்தான் நடைபெறும் என்பதை,

'உலகத்தை உடனே மாற்றிவிட முடியாது. படிப்படியாகத்தான் மாற்ற முடியும்.'

என்ற பகுதியின் வழி புலப்படுத்துகின்றார். இந்த நம்பிக்கை அவர்க்கு இருப்பதால்தான் உலகினைத் திருத்த நம்மால் இயன்ற கடமையைச் செய்வோம் என்கின்றார்.

"உலகைத் திருத்த நம் பங்கு முயற்சி செய்வோம். பணவேட்டையும் புகழ்வேட்டையும் அவற்றால் ஆகிய ஏக்கங்களும் கவலைகளும் இல்லாமல் சமுதாயம் சீராக அமைவதற்குரிய வகையில் அறிவை வளர்ப்போம். அறநெறியைப் பரப்புவோம். உடனே பயன்காண முடியாமல் போகலாம். கவலை வேண்டா; எதிர்கால தன்மையைக் கருதிக் கடமையைச் செய்-
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/22&oldid=1236323" இருந்து மீள்விக்கப்பட்டது