பக்கம்:அறவோர் மு. வ.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

23

"ஊருக்கு ஒரு காந்தியும் திருவள்ளுவரும், புத்தரும் பிறந்தாலும், இந்த உலகத்தைத் திருத்த முடியாது. சீர்ப்படுத்த முடியாது. ஆனால் வறுமையை ஒழித்து விட்டால்தான் காந்தியமும் திருக்குறளும் அன்புநெறியும் வாழ முடியும்."
- கரித்துண்டு, பக். 57

சமுதாயத்தின் குறைகளைக் கண்டு நெஞ்சம் குமுறி அவற்றை நிறைவாக்க வழிவகுத்துக் கொடுக்கும் இப் பகுதிகள் அனைத்தும் அவரைச் சிறந்த அறவோராக அன்றோ உணர்த்தி நிற்கின்றன. சமுதாயச் சிக்கல்களையும் தீர்வுகளையும் காண்பதோடு அமைந்து விடாமல் நல்லதொரு சமுதாயம் காணவும் விழைகின்றார். எனவே இன்று உள்ள சமுதாயம் அழிந்து புதியதொரு சமுதாயம் ஏற்பட வேண்டும் என்பது இவர் கருத்து.

"ஓ, ஓ! நீ கொடுக்கும் காசு அவர்களைக் காப்பாற்ற முடியுமோ! ஊரே தீப்பற்றி எரியும்போது உன்னைப் போல் நாலைந்து பேர் சிறுசிறு குவளைகளில் தண்ணீர் கொண்டுபோய் வேகிற மூங்கில்களை நனைப்பதால் பயன் என்ன? அதைவிட ஊர் நன்றாக எரிந்து சாம்பலாகட்டும். குடிசையும் அரண்மனையும் ஒன்றாகச் சேர்ந்து பொசுங்கட்டும். அந்தச் சாம்பலின் அடிப்படையின் மேல் புதிய வீடுகளை ஒரே ஒழுங்காகக் கட்டுவோம் என்றிருப்பவனே அறிவாளி.
- பெற்றமனம், பக். 141-142

இப்படிப் புதியதாக அமைக்கும் சமுதாயத்தினை,

"வயிறு வளர்ப்பது பற்றியும் குடும்பம் வாழ்வது பற்றியும் கவலை இருக்கக்கூடாது. உழைக்கக் கையும் காலும் இருந்தாலும் உயிர் வாழ உரிமையும் உண்டு என்ற நிலை நாட்டில் ஏற்பட வேண்டும். பிறந்தவர்கள் எல்லோரும் ஏதாவது தொழில் செய்து பிழைக்க முடியும் என்ற கட்டாயப் பொருளாதார நிலைமை ஏற்பட வேண்டும். இப்போது கட்டாய வயிறு, கட்டாயக்குடும்பம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/26&oldid=1205572" இலிருந்து மீள்விக்கப்பட்டது