பக்கம்:அறவோர் மு. வ.pdf/30

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
27
 


வாழ வேண்டும் என்ற சாதியா? என்று தெரிந்துகொள். பிறகு அதே சாதிப்பெண்ணைத் தேடு"
- அல்லி , பக். 287

என்ற பகுதி இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு சாதி. எப்படியாவது வாழலாம் என்ற ஒரு சாதி என்ற இரண்டு சாதி மட்டுமே என்பதை அறிவுறுத்துகின்றது.

அமைதிக்கு வழி காணல்

உலகத்தில் குழப்பம் ஒழியவும், அமைதி தோன்றவும், சமுதாயம் திருந்தவும் போட்டி, பூசல், பகை இவற்றை ஒழிக்க வேண்டும் என்று நவில்கின்றார்.

"....ஆகவே போட்டி பூசல் பகை இவற்றிற்குக் கல்வியிலும் இடம் இல்லாமல், விளையாட்டிலும் இடம் இல்லாமல் கைத்தொழிலிலும் இடம் இல்லாமல் செய்தால் தான் அரசியல் திருந்தும், சமுதாயம் திருந்தும். இவ்வாறு போட்டி பூசல் பகையை ஒழித்தால் தான் வன்பு தேயும்; அன்பு வளரும்; உலகத்தில் குழப்பம் ஒழியும்; அமைதி பெருகும்"

- வாடாமலர், பக். 226

நாட்டின் அமைதிக்குக் கேடு விளைவிக்கும் போரை இவர் மிகவும் வெறுக்கிறார். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளால் அவனே அழிதல், அதன் செயல்களுக்குப் போர் முறை என்று பெயரிடுதல் ஆகிய அவல நிலைகளைக் கண்டு நெஞ்சம் குமுறுகின்றார் டாக்டர் மு. வ. அந்தக் குமுறலின் வெடிப்பை,

"புலி சிங்கங்களால் அழிந்தாலும் கவலை இல்லை. நாய், நரிகளால் அழிந்தாலும் கவலை இல்லை. கண்ணுக்குத் தெரியாத காலரா மலேரியாக் கிருமிகளால் அழிந்தாலும் கவலை இல்லை. மனிதனே பெருமை கொண்டு அறிவால் கண்டு படைத்த கருவி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/30&oldid=1236329" இருந்து மீள்விக்கப்பட்டது