பக்கம்:அறவோர் மு. வ.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

43


பெண்கள் திருமணம் ஆகாமலே இருக்கட்டும் என்று விட்டுவிட வேண்டும். மணிமேகலை இல்லையா? ஆண்டாள் இல்லையா?"
- அகல் விளக்கு, பக். 348

என்பதை எடுத்துக் காட்டுகின்றார்.

புதல்வர்க்கு

பெற்றவர்கள் இருக்கும்போது புதல்வர்கள் அவர்களை விட்டுப் பிரிந்து வருதல் கூடாது. வந்தால் அழிய வேண்டியதுதான் என்பதைச் சந்திரன் வாழ்க்கை மூலம் சித்திரிக்கின்றார். புதல்வர்கள் பெற்றவர்களை அவமதித்துப் பிரிந்துவந்தால் தாய்க்குருவியை விட்டு நீங்கின குருவிக் குஞ்சுகளைப் போல் மற்ற விலங்குகளுக்கு இரையாக வேண்டி நேரிடும் என்பதை,

"குருவி அருமையாகக் கூடுகட்டிக் குஞ்சுகளைக் காப்பது போல் நம்முடைய பெற்றோரும் நமக்கு அருமையாக ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். குஞ்சு நன்றாக இறக்கை முளைப்பதற்கு முன் கூட்டை விட்டு வெளியே வரத் தொடங்கினால் என்ன ஆகிறது பார்த்தாயா? விழுந்து விழுந்து இடர்ப்படுகிறது. தாய்க்குருவியாலும் காப்பாற்ற முடியவில்லை. கடைசியில் காக்கைக்கோ பூனைக்கோ இரையாகிறது”
- அகல் விளக்கு, பக். 253

என அகல் விளக்கில் அறிவுறுத்துகின்றார்.

ஆண்களுக்கு

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் பழகும்போது எந்தவிதத் தடுமாற்றமும் இன்றி உள்ளத்தால் பழக வேண்டும் என்று கூறுகின்றார். தடுமாற்றமும் ஏமாற்றமும் தேவை இல்லை என்பதை,

"பெண்கள் இருவர் பழகினால் உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவு கொண்டு பழகவில்லையா? (நீங்கள்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/46&oldid=1236338" இலிருந்து மீள்விக்கப்பட்டது