பக்கம்:அறவோர் மு. வ.pdf/47

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44
அறவோர் மு. வ.
 


ஆண்கள் இருவர் பழகும்போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம் ஏமாற்றம் எல்லாம்?"
- அகல் விளக்கு, பக். 389

என்று அகல் விளக்கில் அறைகின்றார். இந்தப் பெண்களுடன் பழகும்போது அவர்தம் அன்பு கிடைக்கும் காலம் வரையில் அவர்தம் அழகு கண்ணுக்குத் தெரியாமலே இருக்க வேண்டும் என மொழிகின்றார்.

"பெண்ணன்பு பெறும் வரையில் பெண்ணழகு கண்ணுக்குத் தோன்றாமலே இருந்தால் நல்லது!"

- அகல் விளக்கு, பக். 391

குடும்ப வாழ்க்கைக்குப் பெண்ணைத் தேடும்போது ஓர் ஆடவன் முதலில் அவளிடம் தேட வேண்டியது குணம். அடுத்தது அறிவு. அடுத்தது அழகு என்று அறிவுறுத்துகின்றார்.

"உனக்கு ஏற்ற பெண்ணைத் தேடும்போது அழகு முதல் தேவையாக இருக்கக்கூடாது. அறிவும் முதல் தேவையாக இருக்கக் கூடாது, இருக்க வேண்டியதில்லை. குணமே உன்னுடைய முதல் நாட்டமாக இருக்க வேண்டும். குணம் உண்டா? அறிவு உண்டா! என்று பார்த்து விட்டு அழகும் உண்டா? என்று பார்"

- மலர்விழி, பக். 42

அழகை மட்டுமே கண்டு ஓர் ஆண்மகன் ஒரு பெண்ணைத் தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதை இதே நாவலில் மற்றோர் இடத்திலும் வற்புறுத்துகின்றார்.

"நல்ல ஓவியக் கலைஞனைத் தேடும்போது அவனுக்கு நல்ல கண் பார்வை இருக்கிறதா? என்றே ஆராய வேண்டும். செவி நுட்பம் பெற்ற ஒரு குருடன் ஓவியக் கலைக்குத் தேர்ந்தெடுக்க முடியுமா? இசைக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/47&oldid=1236339" இருந்து மீள்விக்கப்பட்டது