பக்கம்:அறவோர் மு. வ.pdf/48

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
45
 


கலைக்குக் கண்பார்வை கட்டாயம் அல்ல. ஆனால் செவி நுட்பம் கட்டாயம் வேண்டும். அதுபோல் தன் வாழ்க்கையிலும் ஒரு நாள் இரண்டு நாள் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து குலாவுகிற உறவுக்கு - விபசார நட்புக்கு - அழகு கட்டாயம் வேண்டும். ஆனால் வாழ்நாள் முழுதும் பழகும் வாழ்க்கைத் துணைக்கு அன்புதான் முதலில் வேண்டியது. அழகும் இருந்தால் இருக்கட்டும். ஓவியக் கலைஞனுக்கு நுட்பமான செவியும் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதையே நாடித் தேர்ந்தெடுக்கக் கூடாது”
- மலர்விழி, பக், 42

வாழ்க்கைத் துணையைத் தேடுபவருக்கு மற்றொன்றும் கூறுகின்றார். அவன் தன் சாதிப் பெண்ணையே தனக்குத் துணையாக்கிக் கொள்ளுதல் வேண்டுமாம்!

"உன் சாதிப் பெண்ணாகப் பார்த்து மணந்து கொள். நீ என்ன சாதி என்று எண்ணிப் பார். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சாதியா? எப்படியாவது வாழ வேண்டும் என்ற சாதியா? என்று தெரிந்து கொள். பிறகு அதே சாதியான பெண்ணைத் தேடு"

- அல்லி, பக். 287

என்று அவனுக்கு ஏற்ற அவளைத் தேர்ந்தெடுத்தற்குரிய வழிகளை மொழிகின்றார்.

பெண்களுக்கு

ஆண்களும் பெண்களும் பழகாமல் வாழ முடியாத காலம் இது ஆதலின் அவர்தம் பழக்கம் அளவோடு இருக்க வேண்டும் என்பதைப் பல இடங்களில் பெண்களுக்குப் புலப்படுத்துகின்றார்.

"ஆண்களோடு எப்படிப் பழகினாலும் ஆபத்துக்கு இடம் இருக்கும்."

- அகல் விளக்கு, பக். 180

எனவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/48&oldid=1236340" இருந்து மீள்விக்கப்பட்டது