பக்கம்:அறவோர் மு. வ.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

47

பெண்கள் மதிப்பை ஒரு பொருளாகக் கருதக்கூடாது என்றும், தாழ்வு மனப்பான்மையும் சிறுமை மனப்பான்மையும் பெண்களுக்கு ஆகா என்றும்,

"மற்றப் பெண்கள் மதிப்பைப் பற்றிக் கவலைப்படாமல் நீ அவர்களை விட மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டு. அதுவே பெரிய செல்வம்."
- அகல் விளக்கு, பக். 293,
“நான் ஏழை என்ற தாழ்வு மனப்பான்மையோடு சிறுமை மனப்பான்மையோடு போகாதே. நான் எளிய வாழ்க்கை வாழவல்ல உயர்ந்த பெண் என்று பெருமிதமாக எண்ணிக்கொண்டு போ. கண்ணகி, மணிமேகலை, க்யூரி அம்மையார், கஸ்தூரிபா முதலான உத்தமப் பெண்களின் நெறியை உணர்ந்து விட்டவள் என்ற உணர்வு மனப்பான்மையோடு போ. அப்படிப் போய்ப் பழகினால் ஒரு நாளும் நம் மனம் ஏக்கம் அடையாதே"
- அகல் விளக்கு, பக். 294

என்ற பகுதிகளில் நவில்கின்றார். மேலும் பெண்கள் பணிவாகவும், அன்பாகவும் இருக்கவேண்டும் என்பதையும், தம்மிடம் உள்ள பிடிவாத குணத்தை மாற்றும் வல்லமை உடையவர்களாகவும் திகழ வேண்டும் என்றும் கூறுகின்றார். இதனை,

"இளமையிலிருந்தே நீ அறிவும், திறமையும், அன்பும் பணிவும் உள்ள பெண்ணாக விளங்குவதைக் கண்டிருக்கிறேன் அல்லவா?"
- தங்கைக்கு, பக். 5
"பிறரிடம் கொள்ளும் விருப்பு வெறுபபுகளில் பிடிவாதம் காட்டாதே, இதில் பிடிவாதம் பெருந்தீங்கு உண்டாக்கும். 'பெண்கள் பிடிவாதமானவர்கள். நினைத்ததை முடிக்காமல் விடமாட்டார்கள்’ என்று
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/50&oldid=1236343" இலிருந்து மீள்விக்கப்பட்டது