பக்கம்:அறவோர் மு. வ.pdf/51

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
48
அறவோர் மு. வ.
 


பழிச்சொல் இருக்கிறது. அதை மாற்றிவிடு. அன்புக்காக விட்டுக் கொடுப்பவர்கள்தான் பெண்கள் என்பதை உன் வாழ்வில் புலப்படுத்து"
- தங்கைக்கு, பக். 26

என்று தங்கைக்குக் கூறும் அறவுரைகளிலிருந்து தெளியலாம். இனிச் சமுதாயத்தில் காணப்படும் குருட்டு வாழ்க்கை நிலையற்றதாக இருக்க வேண்டுமானால் பெண்கள் நல்லறிவு உடையவர்களாக விளங்கவேண்டும் என்று கருதுகின்றார்.

"பெண்களுக்கு நல்லறிவு வந்தால்தான் மூடநம்பிக்கை
நாட்டை விட்டு ஒழியும். இல்லையானால் வீட்டுக் கொரு ::விவேகானந்தர் பிறந்தாலும் இப்படியேதான்
குருட்டு வாழ்க்கை நிலையாக இருக்கும்’
- கள்ளோ காவியமோ, பக். 57

என மூடநம்பிக்கை ஒழிவதற்கும், குருட்டு வாழ்க்கை நிலையாமை உடையதாக ஆவதற்கும் பெண்களின் நல்லறிவே காரணம் என்பதைப் புலப்படுத்துகின்றார். பெண்கள் நல்லறிவு உடையவர்களாகத் துலங்குவதோடு ஒழுக்கம் உடையவர்களாகவும் இலங்குதல் வேண்டும். ஒழுக்கம் இரு கட்சியினராலும் போற்ற வேண்டிய பொதுநெறி என்றாலும் பெண்கள் அதனை ஆண்களைவிட மிகுதியாகப் போற்ற வேண்டும் என்று கூறி அதற்குரிய காரணத்தையும் விளக்குகின்றார்.

"ஆணின் வாழ்க்கை வெளியே பலரோடு பழகித் திரியும் வாழ்க்கை. பலரோடு பழகுவதால் மனம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒழுக்கம் கெடுவதற்கும் வழி உண்டு. சேற்றில் நடந்து வழுக்குவது போன்றது. இது பெண்ணின் வாழ்க்கை குடும்பத்தளவில் பெரும்பாலும் இருந்து கணவனோடு மக்களோடு பழகி அமையும் வாழ்க்கை. மனம் கெடுவதற்கு வாய்ப்பு இல்லை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/51&oldid=1237854" இருந்து மீள்விக்கப்பட்டது