பக்கம்:அறவோர் மு. வ.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

49


ஒழுக்கம் தவறுவதற்கும் வழி இல்லை. மணலில் நடப்பது போன்றது இது. ஆகையால் தவறி விழவே கூடாது. விழுந்தால் நொண்டியாக இருக்கவேண்டும்: அல்லது கோமாளியாக இருக்கவேண்டும்!’
- அகல் விளக்கு, பக். 308-309

தமிழர்க்கு

தமிழர்க்கு இனப்பற்றும் மொழிப்பற்றும் இல்லை. எனவேதான் அவர்கள் இருக்க இருக்கக் கீழே போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிய உணர்ந்த டாக்டர் மு. வ.

"இன்றைய தமிழர்க்கு வேண்டியது அன்றாடக் கடமையைப் பற்றிய ஆராய்ச்சியே! மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் செயலில் காட்டும் முறையே"
- தம்பிக்கு, பக். 15-16

என்று இன்றைய தமிழர்க்கு வேண்டியவற்றை எடுத்துக்காட்டுகின்றார்.

"தமிழர்கள் என்றால் திறம் படைத்தவர்கள் என்ற பெயர் எல்லாத் துறைகளிலும் வளர வேண்டும்"
- அந்த நாள், பக். 113

என்று விரும்பும் அவர் அதற்குத் தமிழன் காலத்தை உணர்ந்து அதை நீந்திச் செல்ல வேண்டும் என்று கனவு காண்கின்றார்.

"தமிழன் எப்படியாவது காலத்தை உணர்ந்து மாறுதல்களை உணர்ந்து வாழ்ந்தால் போதும். கால வெள்ளத்தில் நீந்திச் சென்றால் போதும்."
- அன்னைக்கு, பக். 15

இந்தக் கனவு நனவாக தமிழன் வல்லவனாகத் திகழ்தல் வேண்டும் என்று கூறுகின்றார். இதனை,

"தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித் தனியாகவும் குடும்பம் குடும்பமாகவும், நாடு நாடாக
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/52&oldid=1236345" இலிருந்து மீள்விக்கப்பட்டது