பக்கம்:அறவோர் மு. வ.pdf/53

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50
அறவோர் மு. வ.
 


வும் இருந்து அழிந்தது போதும். இனிமேல் வல்லவர்களாகவும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்"
- தம்பிக்கு, பக். 6

என்று தம்பிக்கு எழுதும் கடிதத்திலிருந்து தெளியலாம். தமிழன் தமிழ் மொழியை வல்ல மொழியாகவும், பல்லோர் போற்றும் மொழியாகவும் ஆக்கக் கடமைப்பட்டவன் என்பதை, "தமிழ் மொழி நல்ல மொழிதான். ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா? பெரும்பாலோர் போற்றும் மொழியாக ஆக்கினோமா?” (தம்பிக்கு, பக். 17) என்ற வினாவின்வழி உணர்த்துகின்றார். இது ஒவ்வொரு தமிழ் மகனின் உள்ளத்திலும், செவியிலும் ஒலிக்கப்பட வேண்டிய வினாவாகும். தமிழ் நாட்டின் மீது தமிழனுக்குக் காதல் இருக்க வேண்டும். தமிழ் நாட்டுக்காகத் தமிழன் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை,

'உன் மானத்தைவிட நாட்டின் மானம் பெரிது என்று உணர். உன் உயர்வைவிட நாட்டின் உயர்யு இன்றியமையாதது உன்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும்போது உன் நலம் உயர்வு மாயை ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக் கொடு’

-தம்பிக்கு, பக். 55

எனத் தம்பிக்கு எழுதும் மடலில் குறிக்கின்றார்.

தனிமனிதனுக்கு

உலகத்திற்கு - சமுதாயத்திற்கு - இல்வாழ்க்கை மாந்தர்க்கு - ஆண்களுக்கு - பெண்களுக்கு - தமிழர்க்கு என்று பல்வேறு பிரிவினரும் ஏற்றிப்போற்றும் கருத்துகளை - எண்ணங்களைத் தம் இலக்கிய வடிவங்களில் உணர்த்திய டாக்டர் மு. வ. அவர்கள் தனிமனிதர் ஒவ்வொருவரும் போற்ற வேண்டியவற்றையும் குறித்துச் சென்றுள்ளார். இவை ஓர் இனத்தவர்க்கோ, ஒரு நாட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/53&oldid=1236346" இருந்து மீள்விக்கப்பட்டது