பக்கம்:அறவோர் மு. வ.pdf/54

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
51
 

வர்க்கோ மட்டும் உரித்தானவை அல்ல. உலகக் குடிமகனாகப் பிறந்த ஒவ்வொருவரும் போற்ற வேண்டியவைகளாகும்.

ஒவ்வொருவரும் தம் மனத்தை ஒழுங்காகப் பண்பட்டதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அமைத்துக் கொண்டால் "அவர்கள் வீட்டில் இருந்தபடியே தவம் செய்யலாம். அரிய பெரிய தொண்டுகள் செய்யலாம். மற்றவர்களுக்கு அது முடியாது" என்று கூறுகின்றார். மனத்தை ஒரு நெறியில் நிறுத்த வேண்டும் என்று கூற வருகின்றவர்,

"மனம் ஒரே இடத்தில் வேரூன்றி வளர்ந்து செழித்திடும் மரம்போல் ஒரு நெறியைப் பற்றி உறுதியாக நின்றால் நல்லதுதான், அல்லது எங்கெங்குச் சென்றாலும் மாலையில் குறித்த இடத்திற்கு வந்து சேர்ந்திடும் மாடு போல் எத்தொழிலைச் செய்தாலும் குறிக்கோளை மறக்காத மனமாக இருந்தாலும் நல்லதுதான். ஆனால் இன்ன திசை இன்ன போக்கு இன்ன கூடு என்று வரையறை இல்லாமல் இயன்றவரையில் பறந்து அலையும் பறவையாக இருந்தால் பயன் என்ன?”

-நெஞ்சில் ஒரு முள், பக். 5

என்று கேட்கின்றார்.

ஒரு செயலில் இறங்கும்போது உறுதியாக இருக்க வேண்டும். செய்யும் செயலைத் திருந்தச் செய்ய வேண்டும். அதைச் செய்யும்போது வேகம் கூடாது என்பவற்றையெல்லாம் அகல்விளக்கு நாவலில் தெரிவிக்கின்றார்.

"

ஒரு தொழிலில் இறங்கினோமா, ஒரே உறுதியாக இறங்கிட வேண்டும். அப்புறம் வேறு எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. வேறு எதிலும் ஈடுபடக்கூடாது."

-அகல் விளக்கு, பக். 340
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/54&oldid=1209916" இருந்து மீள்விக்கப்பட்டது