பக்கம்:அறவோர் மு. வ.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அறவோர் மு. வ

"வழிபாட்டால் பயன் உண்டு. மனம் அமைதி பெறுகிறது, வலிமை பெறுகிறது"

-மண்குடிசை பக். 453

என்று மண்குடிசையில் சுட்டுகின்றார். அவர் காணும் சமுதாயத்தில், சமய உலகில் ஆத்திகம் நாத்திகம் என்று. இரு பிரிவுகள் காணப்படுகின்றன. உண்மையான ஆத்திகம் இது. நாத்திகம் இது என்பதை,

"கடவுளின் நோக்கத்தை உணர்ந்து அதற்கு ஏற்ப நடப்பதுதான் உண்மையான ஆத்திகம். உண்மையான வழிபாடு. அதற்கு மாறாக நடப்பதுதான் நாத்திகம்"
- மண்குடிசை, பக். 499.

என்று மண்குடிசையில் வேறுபடுத்துகின்றார்.

"அறநூல்களின் துணைகொண்டு ஆராய்ந்து, பிறகு உலகத்து உயிர்களின் வாழ்க்கையை எண்ணிப் பார்த்தால் கடவுளின் ஆட்சிமுறை புலப்படும்"
- மண்குடிசை, பக். 429

என்று கூறுவது கடவுள் இல்லை என்று கூறுவார்க்குக் கடவுள் உண்மையைக் காட்டுவதாகும். கடவுள் பற்றிக் குறிக்கும் போது கூட அவர் சிந்தை அறத்தை மறக்கவில்லை என்பது,

"தன்னை எந்நேரமும் புகழ்ந்து பாடுவதைக் கடவுள் விரும்புவதில்லை. தான் வகுத்த அறநெறியில் வாழ்ந்து மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்தித் தொண்டு செய்வதையே அவன் ஏற்றுக் கொள்வான்"

என்ற மொழியால் புலனாகின்றது.

மரணம்

மரணம் பற்றி இவர் கூறும் கருத்து ஒவ்வொருவரும் உணர வேண்டிய ஒன்றாகும். மரணத்தைக் கண்டு அஞ்சுபவர்க்கும், ஆற்றாமையால் புலம்புபவர்க்கும், மரணத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/59&oldid=1209946" இலிருந்து மீள்விக்கப்பட்டது