பக்கம்:அறவோர் மு. வ.pdf/62

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
59
 

இப்படி அனைவர்க்கும் முன்னோடியாக - பலரை வழி நடத்திச் செல்லும் நெறிகாட்டியாக விளங்கிய மு. வ. அவர்கள் புகழை எதிர்பார்த்து எதையும் செய்தாரில்லை. என்றாலும் அவர் விட்டுச் சென்ற இந்த உலகம் அவரைப் புகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

"உலகம் யாரைப் புகழ்கிறது? புத்தர், காந்தியடிகள் முதலான அறவோரைப் புகழ்கிறது. அசோகன் கரிகாலன் முதலான ஆட்சித் தலைவரைப் புகழ்கிறது. திருவள்ளுவர் ஷேக்ஸ்பியர் முதலான அறிஞர்களைப் புகழ்கிறது. அவர்களின் உடல் மறைந்து பற்பல நூற்றாண்டுகள் ஆன பிறகும் அவர்களின் பெருவாழ்வு நினைவில் நீங்காதவாறு உலகம் புகழ்ந்து கொண்டே வருகிறது. அந்தப் பெருமக்கள் நிலையான புகழ் வேண்டும் என்று விரும்பியதும் இல்லை. புகழுக்காக முயன்றதும் இல்லை. ஆனாலும் உலகமோ அவர்களை விடாமல் புகழ்ந்து கொண்டே வருகிறது."

-உலகப் பேரேடு

இந்த வரிசையில் வைத்து உலகம் மு. வ. அவர்களையும் புகழ்ந்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/62&oldid=1210039" இருந்து மீள்விக்கப்பட்டது