பக்கம்:அறவோர் மு. வ.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



II

கலைஞர்

கலையும் கலைஞரும்

கலை என்பது ஒர் அனுபவத்தை, ஒர் உணர்வை, ஒரு கருத்தைப் பிறர் சிந்தையைத் தொடும்வண்ணம் படைத்துக் காட்டும் திறனே ஆகும். கருத்தை வெளிப்படுத்துவதில் கலைவண்ணமும், கலையிலே கருத்தின் வெளிப்பாடும் சிறக்க வெளியிடும் ஆற்றலாளனே சிறந்த கலைஞனாகிறான். கலையும் கருத்தும் படைப்பின் சிறகுகள் போன்றவை. கருத்தின் கலை நடையாகும். கலையின் கருத்து உணர்வாகும். எனவே கலைஞன் என்பவன் கருத்தாளனாகவும், கருத்தாளன் என்பவன் கலைஞனாகவும் இருக்க வேண்டியது இன்றியமையாததாகிறது. கலையும் கருத்தும் இணைந்தும் இழைந்தும் இருக்கும் போதே ஒரு படைப்பு சமூகத்தின் வரவேற்பிக்கும் பயன்பாட்டிற்கும் உரியதாகிறது. சமுதாயக் கலைஞரான டாக்டர் மு. வ. அவர்களின் நாவல்களில் காணும் கலைத் திறனைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வாழ்வும் இலக்கியப் பணியும்

டாக்டர் மு. வ. தமிழ்ப்பேராசிரியராகத் தொடங்கி, இலக்கியத் திறனாய்வாளராகத் திகழ்ந்து, படைப்பாளராக மலர்ந்து கலைத்தன்மை வாய்ந்த அறச்சிந்தைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/63&oldid=1210043" இலிருந்து மீள்விக்கப்பட்டது