பக்கம்:அறவோர் மு. வ.pdf/65

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.62
அறவோர் மு. வ.
 

எழுத்தாளர் பதவிதான். எழுத்து என் உயிருடன் கலந்துவிட்ட ஒன்றாகும். என் கடைசி மூச்சு உள்ளவரையில் ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளமை கருதத்தக்கது. மதுரைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி கிடைத்தபோது, அவர் அப்பதவியைப் பெற விரும்பவில்லை. அதற்கு ஒய்வு, உடல் நலக்குறைவு, நாவல் எழுதும் விழைவு இம்மூன்றுமே காரணம் என்றார்.

நாவல் பணி

உலகம் இன்று ஒரு குடும்பமாகியுள்ளது. உலகத்தின் பல்வேறு வளர்ச்சி பல்வேறு பாகங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையில் தாக்குரவு பெற்றுள்ளது. காலத்தின் வேகத்தோடு ஒட்டிப்போக வேண்டிய இன்றியமையாமை இன்று மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இன்று மனித சமுதாயத்தின் சிக்கல்களையும் விடிவுகளையும் விவாதிக்கின்ற, விளக்குகின்ற, கலையாக்குகின்ற மேடையாக நாவல் இலக்கியம் அமைந்துள்ளது. மனித சமுதாயத்தோடு ஒட்டி உருவாகி வளர்ந்த நாவல் இலக்கியம் இன்றையச் சமுதாயத்தின் மக்கள் இலக்கிய வடிவமாகியுள்ளது.

மேனாட்டாரின் வரவால், உரைநடை வளர்ச்சியால் தமிழ் இலக்கிய வரலாற்றில் சீரிய இடத்தைப் பெறுகின்ற அளவுக்கு இன்று நாவல் இலக்கியம் வளர்ந்துள்ளது. வேதநாயகம் பிள்ளை தொடங்கிய நாவற்கலை ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு வகையான தன்மைகளைப் பெற்றிருந்தது. சுதந்திரக் கால கட்டத்திலேதான் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சி நிலையைப் பெற்றது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் தமிழர் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு நாவல் எழுதும் புலமை பலர்க்கு ஏற்படவில்லை. ஒரு சிலர் அப்புலமை பெற்றிருந்தும் நூல் பல எழுதவில்லை. வேறுசிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/65&oldid=1210048" இருந்து மீள்விக்கப்பட்டது