பக்கம்:அறவோர் மு. வ.pdf/68

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
65
 

போல் அன்றி, தம் படைப்புகள் வாயிலாக, சமுதாயத்தின் சிக்கலையும் குடும்பத்தின் சிக்கலையும் எடுத்துக்காட்டி, அதற்கான விடிவுகளைக் கலைப்பாங்கு குலையா வண்ணம் குறிப்பிட்டு, தம் நாவல்களைச் சமுதாயத்தின் மருந்தகமாக்கியுள்ளார். உலகக் கண்ணோட்டத்தோடு மக்கள் சமுதாயம் வாழவேண்டிய-வளர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இன்றைய வேடம் நிறைந்த சமுதாயச் சூழலில் மனிதன் புதிய புதிய முறையில் வாழ்க்கையை அணுக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் வாழ்க்கையைச் சுமையற்றதாய், எளிமையானதாய் ஆக்கிக் கொள்ள முடியும். இக்கோணத்தில் 'செந்தாமரை' (1946), 'கள்ளோ காவியமோ?' (1947), ‘பாவை’ (1948), 'அந்தநாள்' (1948), 'மலர்விழி' (1950), 'பெற்றமனம்' (1951), 'அல்லி' (1952), 'கரித்துண்டு' 1953), 'கயமை' (1956), 'நெஞ்சில் ஒரு முள்' (1956), 'அகல் விளக்கு' (1958), 'வாடா மலர்' (1960), 'மண்குடிசை' (1961) ஆகிய நாவல்களைப் படைத்தார். கதைக் கட்டுக்கோப்புக்குள் நின்று கலைப்பாங்கு சிதையா வண்ணம் வெளியீட்டு முறையாலும், விளக்கும் கருத்தாலும் உயர்ந்தே நின்றுள்ளார்.

சமுதாய நோக்கம்

இன்றைய சமுதாயம் முரண்பாடுகளின் முழுவடிவமாக உள்ளது. முரண்பாடுகளுக்கு மூலகாரணம் தனிமனிதரா, சமுதாயமா, அரசா என்ற கேள்விகள் எழக்கூடும். ஆனால் மூன்றுமே பின்னிப் பிணைந்தவை. எல்லா நிலையிலும், எல்லா மனிதர்களும் மற்றவர்களின் இல்லாமையை, இயலாமையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அரசியல் துறை, ஆட்சித்துறை, தொழில்துறை, நாட்டின் அரசியல் கோட்பாடுகள் போன்றவை சமுதாயத்தின் நலத்திற்கு எந்த அளவிற்குக் காரணமாக அமைகின்றனவோ அதே அளவிற்குச் சீர்கேட்டிற்கும் துணைநிற்கின்றன. எனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/68&oldid=1210071" இருந்து மீள்விக்கப்பட்டது