பக்கம்:அறவோர் மு. வ.pdf/70

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
67
 

மனப்போக்கால் உருவாகுவனதாம் என்று கருதினார் டாக்டர் மு. வ. எனவேதான் அவர் தம் நாவல்களின் கருப்பொருளிலும், கருத்துப் பொருளிலும் சமுதாயச் சிக்கல்களை எடுத்துரைத்துள்ளார்.

கருப்பொருளும் கருத்துப்பொருளும்

பிறருடைய பண்பாட்டையே பலவீனமாகக் கருதுவது இன்றைய சமுதாயம். இத்தகைய எண்ணப்போக்குடைய சமுதாயத்தில் மனச்சான்றுபடி வாழும் மனிதர்கள் சந்திக்கக்கூடிய போராட்டங்களையும், இயற்கையின் தத்துவத்தாலே பலம் குன்றிப் போயுள்ள பெண்ணினமும், நேர்படத்தக்க வாழ்க்கைச் சிக்கலையும் கருப்பொருளாக்கி இவற்றின் இழையோட்டத்திலே அனைத்து நாவல்களையும் படைத்துள்ளார் மு. வ.

சமுதாய நிலையில் கொடிய தன்மைகள், இல்லாமையால் ஏழையர் வாழ்வில் காணும் அவலம், கல்வி முறையில் உள்ள சீர்கேடுகள், சமய, சமுதாய நெறிகளால் - மூட நம்பிக்கையில் வாழும் அறியாமை, திருமணமுறை, வரதட்சணைக்கொடுமை, மரபுவழிப்பட்ட சிந்தனைகளால் வரும் கேடு, பொதுவுடைமைச் சிந்தனை ஆகியவற்றைத் தம் பாத்திரங்கள் வாயிலாகக் கருத்துப் பொருளாக்கியுள்ளார்.

தனிமனிதனும் சமுதாயமும்

சமுதாயத்தில் காணப்படுகின்ற சீர்கேடுகளுக்கும், சிக்கல்களுக்கும் அடிப்படைக் காரணம் சமுதாயப்போக்கே தவிர, தனிமனிதர்களின் செயல்கள் அல்ல என்று கருதினார். கோட்பாட்டிற்கும், சமுதாயத்திற்கும் இடையே காணப்படும் இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்பவர்களாகத் தனிமனிதர்கள் விளங்கினாலும், சமுதாயத்தின் ஒருங்கிணைந்த குறைபாடுகளுக்குச் சமுதாய அமைப்பே மூலநோய் என்று கருதினார் டாக்டர் மு. வ. அடிப்படையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/70&oldid=1234997" இருந்து மீள்விக்கப்பட்டது