பக்கம்:அறவோர் மு. வ.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

அறவோர் மு. வ.

கலைகளை விட வாழ்க்கைக் கலையை அறிவதே சமுதாய மேம்பாட்டிற்கு அடிகோல வல்லது என்று தம் படைப்புக்களைக் சித்திரித்தவர்.

'கலை என்பது உள்ளம் உணர்ந்தவாறு வெளியிடும் திறன்' என்பர் (மண் குடிசை, பக். 111). அது வாழ்க்கையின் உயர்விற்கு உறுதுணை புரிய வல்லதாய் நெறி காட்டும் போக்கினதாய்5, (கொங்குதேர் வாழ்க்கை, பக். 45) அமைய வேண்டும்; இன்பப் பொழுது போக்கிற்குரியதாய் மட்டுமின்றி, வாழ்க்கையின் பயன்பாட்டினை நல்க வல்லதாய்6 அமைந்து சமுதாயத்தைத் திருத்தி உயர்த்த வல்லதாய்7 அமைய வேண்டும் என்ற கருத்துடையவர் டாக்டர் மு. வ. என்பதை அவர்தம் நூல்களின் குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது.

எழுத்தாளரின் நோக்கம்

டாக்டர் மு. வ., கலை வடிவத்தால் மட்டும் சிறப்பதில்லை; அதன் பயன்பாட்டாலும் நோக்காலும் சிறக்கிறது. வாழ்க்கையில் உயர்ந்த உணர்ச்சி அனுபவங்கள் ஏற்படும்போது அவற்றைக் கலைச்செல்வங்களாக்குதல் வேண்டும். கலைவடிவம் தந்து அழகாகப் படைத்தல் வேண்டும் என்று எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில்8 எழுத்தாளர் கொள்ளத்தக்க குறிக்கோளைப் புலப்படுத்தியுள்ளார். டாக்டர் மு. வ. தம் நாவல்கள் வாயிலாகச் சமுதாயத்தின் சிக்கல்களை - அகப்புறப் போராட்டங்களைப் பல்வேறு கோணங்களில் அணுகி சமுதாய விடிவிற்கான புதிய நோக்கங்களை வெளியிட்டுள்ளார்.

கருவும் கலையும்

கரு என்பது கருத்தன்று; அது நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளியிடுகின்ற கருத்தினுள் பொதிந்துள்ள மையப்பகுதியே ஆகும். கரு என்பது நாவல் என்னும் கட்டடத்தின் அடித்தளம் போன்றது. 'கதைக்கு எதுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/73&oldid=1462050" இலிருந்து மீள்விக்கப்பட்டது