பக்கம்:அறவோர் மு. வ.pdf/8

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


முதற் பகுதி

I

அறவோர்

முன்னுரை

டாக்டர் மு. வரதராசனார் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து எளிய வாழ்வே வாழ்ந்தவர். பிறப்பும் வாழ்வும் எளிமையாக இருந்தபோதிலும், அவர்தம் எழுத்திலும் சொல்லிலும், செயலிலும் பெருமை பல விளங்கின. அவர் இணையற்ற எழுத்தாளர்; சிந்தனையலைகளைச் சிந்தையில் எழுப்பும் பேச்சாளர்; அறநெறி பிறழாச் செயலாளர்; உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும், நாவலாசிரியராகவும் விளங்கி அவர் தமிழ் மொழிக்குச் சிறந்த எழுத்துப்பணி புரிந்துள்ளார்; அவருடைய எழுத்துகள் இளைஞரின் உள்ளங்களைக் கவர்ந்து, அவர்களின் வாழ்க்கையைத் துலக்கியது. அவர்தம் தமிழ்நடை எளிமையும் எழிலும், திட்பமும், நுட்பமும், தெளிவும் இனிமையும், பீடும் பெருமிதமும் வாய்ந்தது.

அவர் தொடாத துறை ஒன்றுமில்லை; தொட்ட துறைகளை அழகுபடுத்தாமல் விட்டதில்லை. சாகித்திய அகாதெமியின் பரிசினை 'அகல் விளக்கு' பெற, அந் நாளையத் தமிழக அரசின் பரிசினை, 'கள்ளோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/8&oldid=1202826" இருந்து மீள்விக்கப்பட்டது