பக்கம்:அறவோர் மு. வ.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அறவோர் மு. வ.

பாத்திரப்படைப்பு

நேரடிப்பாங்கின
மோகன் (கரித்துண்டு)

நாடகப்பாங்கின
மங்கை (கள்ளோ?
காவியமோ?)


செல்வநாயகம் (மலர்விழி), வடிவு (நெஞ்சில் ஓர் முள்) சந்திரன் (அகல் விளக்கு), மெய்யப்பன் (மண்குடிசை) நாவல்களில் இடம்பெறும் பாத்திரங்களின் போக்கை - அவர்களுக்கு இடும் பெயர்கள் வாயிலாகவே சுட்டுவர் படைப்பாளர். சமுதாயத்தின் பார்வையில் தனிமுத்திரை பெற வேண்டுமென்ற நோக்கில் படைப்பாளர்கள் இத்தகைய பெயர் உத்திகளைப் பயன்படுத்துவதுண்டு. இதனைக் குறுக்கு உத்தி (Fringe technique) என்று வழங்குவர் திறனாய்வாளர்.

"கதைமாந்தர்கள் என் உள்ளத்தில் பிறந்து வளர்கிறார்கள். அவரவர்களுக்குப் பெயர்வைக்கும் பொறுப்பு ஏற்படும்போது அவரவர்களின் பண்புகள் உள்ளத்தில் நின்று தூண்டுதல் புரிகின்றன. அதனால் அப்படிப் பெயர்கள் உண்டு’, என்னும் கூற்றிற்கு ஏற்ப டாக்டர் மு. வ. தம் நாவல்களில் படைக்கப் பெற்றுள்ள பாத்திரங்களுக்குப் பெயர்களை வழங்கியுள்ளார். பாத்திரங்களின் பண்பு நலன்களையும் வாழ்க்கை முறையையும்யொட்டி வழங்கியிருக்கும் பெயர்கள் படைப்பின் கலைத்தன்மைக்கு உரமூட்டியுள்ளன.

1. நெறிநிலைப் பாத்திரங்கள்

அறவாழி, மெய்கண்டார், கமலக்கண்ணர், அருளப்பன் , சீராளர், திலகம், பாவை, செந்தாமரை, மங்கை மான்விழி, மென்மொழி, தேமொழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/81&oldid=1211433" இலிருந்து மீள்விக்கப்பட்டது