பக்கம்:அறவோர் மு. வ.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

79

2. நெறியிலாப் பாத்திரங்கள்

ஆணவர், சுப்புரத்தினம், கேசவராயன், வசீகரம், சகசாம்பாள்.

3. எளிய வாழ்வு உடைய பாத்திரங்கள்

திருவேங்கடம், வேலய்யன், குழந்தைவேல், மணி, சந்திரா, வள்ளி, ரேவதி, கனகா.

4. முரணிலைப் பாத்திரங்கள்

பாத்திரப் படைப்பின் ஆற்றலை வெளிப்படுத்துவது முரணிலைப் பாத்திரங்களாகும். சமுதாயச் சித்திரிப்பாக மட்டுமின்றி, கலைத்திறன் வெளிப்பாடாக விளங்குவது முரண்நிலை படைப்பாகும்.

மோகன் - நிர்மலா (கலையும்/ஆடம்பரமும்) (கரித்துண்டு)

காஞ்சனை - செல்வநாயகம் (எளிடையும்/ஆடம்பரமும்) (மலர்விழி)

தானப்பன் - குழந்தைவேல் (உணர்ச்சி/அமைதி). (வாடாமலர்)

5. கோட்பாட்டுப் பிரதிநிதித்துவப் பாத்திரங்கள்

டாக்டர் மு.வ.வின் பாத்திரங்கள் உணர்வின் சித்திரிப்பு என்பதைவிட கருத்தின் சித்திரிப்பு என்பதே மிகப் பொருந்தும். ஒவ்வொரு பாத்திரப் படைப்பின் தன்மையிலும், ஒவ்வொரு எழுத்தின் அசைவிலும் சமுதாய நோக்கமே நெம்புகோலாகயிருந்து டாக்டர் மு.வ.வை உந்தியுள்ளது. குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்களையும் சமுதாய வாழ்வில் ஏற்படும் சிக்கலையும் எடுத்துரைக்கும் டாக்டர் மு. வ. அரசியல் கோட்பாடுகளையும் எடுத்துரைக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/82&oldid=1211440" இலிருந்து மீள்விக்கப்பட்டது