பக்கம்:அறவோர் மு. வ.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

83

பார்க்கின்ற அமைதியற்றவன். அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால் வாழ்க்கையைச் சிதைத்துக் கொண்டவன். அவன் வாழ்க்கையின் முடிவை உரைக்கும் வகையில் சமுதாயத்திற்கு உரைக்க விரும்பிய கருத்தைக் கதையின் முடிவில் உணர்த்திச் செல்கிறார் மு.வ.

"இடுகாட்டிலிருந்து திரும்பிய போதும் கற்பகத்தின் அழுகை ஓயவில்லை. வழியில் சைக்கிளில் சென்ற இருவரில் ஒருவன் "டே! எப்போதும் இதில் வேகம் வேண்டாம்டா. வேகம் உன்னையும் கெடுக்கும்; உன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கும்" என்றான். வலப்பக்கத்தே விளையாட்டு வெளியில் ஒரு பந்தாட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆரவாரத்திற்கு இடையே "விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும் தெரியுமா? நீயே அரசன் என்று எண்ணிக்கொண்டு உன் விருப்பம் போல் ஆடமுடியாது, தெரிந்து கொள்" என்ற குரல் கேட்டது. சிறிது தொலைவு வந்துவிட்ட பிறகும் பந்தாட்டக்காரரின் ஆரவாரம் கேட்டுக் கொண்டிருந்தது!"91 (அகல் விளக்கு).

ஒரு மனிதனிடம் உணர்ச்சி தலைமையேற்றால் அறிவு தூங்கும்; அறிவு தலைமையேற்றால் உணர்ச்சி ஆற்றுப்படும். இக் கருத்தினை உணர்த்த விழைந்த மு. வ. கதைப் பின்னலையொட்டி, உருவகப்போக்கில் காட்சியமைத்துச் சமுதாயத்திற்குச் சொல்ல விழைந்த கருத்தைக் கலைப்பாங்கோடு கதையின் முடிவிலே அமைத்துள்ளார்.

உத்திகள் (நோக்குநிலை)

படைப்பிலக்கியம் என்பது சமுதாயத்தின் பயன்பாட்டிற்கும் மேம்பாட்டிற்கும் உரியதாக வேண்டுமென்று கருதியவர் டாக்டர் மு. வ. என்பதை முன்னரே குறித்தோம். எனவே கருத்து இழைக்கப்படுவதெனில், கலைப்பாங்கை சிதைக்காவண்ணம் சில உத்திமுறைகளைக் கையாள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/86&oldid=1211912" இலிருந்து மீள்விக்கப்பட்டது