பக்கம்:அறவோர் மு. வ.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

அறவோர் மு.வ.


இந்திரா வாழ்வின் முடிவில் கணவனை இழந்து தன்னிலை இழந்து இறக்கிறாள்.

மனச்சான்றின்றி வாழும் மனிதர்கள் வாழ்க்கையில் போராடித்தான் முடிவெய்துகின்றனர் என்ற கருத்தினை டாக்டர் மு. வ. 'நெஞ்சில் ஒரு முள்'ளில் குறிப்புத்திறனால் வெளியிட்டுள்ளார்.

மண்குடிசை

'இன்று உள்ள சமுதாயம் மண்குடிசை போன்றது. அதில் எலிகள் வளை தோண்ட முடிகிறது. பெருச்சாளிகள் கடைக்காலையே தோண்டுகின்றன. பலவகைப் பூச்சிகளும் குடிபுகுகின்றன. எல்லாம் சேர்ந்து குடிசையைப் பாழாக்க முடிகிறது. மண்குடிசையாக உள்ள வரையில் இவைகளைத் தடுக்க முடியாது. ஒன்று, குடிசையை விட்டு இயற்கையோடு இயற்கையாய்க் குகையில் தங்கி வெட்ட வெளியில் திரிய வேண்டும். அல்லது ஒழுங்கான கல்வீடு கட்டி வாழ வேண்டும். அப்போது எலிகள் முதலியன தோன்றி வளர முடியாது.' (மண்குடிசை, ப. 503)

மண்குடிசையையும், கல்வீட்டையும் சுட்டிக் காட்டுவதோடு, சமுதாயத்தின் சீர்கேட்டையும் குறிப்பால் உணர்த்தியுள்ளமையை உணரமுடிகிறது. டாக்டர் மு. வ. கலைஞராகக் காட்சியளிப்பதோடு சமுதாய மேம்பாட்டுச் சிந்தனையாளராகச் சிறக்கக் காண முடிகிறது.

உரையாடல் உத்தி

நாவலாசிரியர்கள் நோக்குநிலையுடன், படிமக்காட்சிகள், சிறப்புச் சொல்லாட்சிகள், தொகையுரை, நினைவுக் காட்சிகள், வருணனை ஆகியவற்றை எடுத்துக்காட்டி, கதையின் போக்கைக் குறிப்பால் உணர்த்திச் செல்வதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/91&oldid=1214336" இலிருந்து மீள்விக்கப்பட்டது