பக்கம்:அறவோர் மு. வ.pdf/93

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
90
அறவோர் மு.வ.
 

உரைப்பதாக அமைத்துக் காட்டாமல், நிகழ்ச்சிகள் வாயிலாக குறிப்புப் பொருள் தோன்றக் காட்டியுள்ளார்.

அகல் விளக்கில் வரும் சந்திரன் உணர்ச்சியின் வார்ப்பாகவே விளங்குபவன். அவன் எந்தப் பிரச்சனையையும் அமைதியான அணுகுமுறையாலே தீர்த்துக்கொள்ள முடியாத போக்கினனாக அமைந்த நிலையை உணர்த்த விரும்பிய மு. வ. காட்சி ஒன்றின் மூலம் குறித்துச் செல்கிறார்.

வீட்டுத் திண்ணைமேல் ஏறி நின்றுகொண்டு காற்றாடியைச் சிறிதுவிட்டுப் பார்த்தேன். காற்றாடி உயர எழுந்து பறந்தது... அது ஒரு வேப்பமரத்தின் கிளையில் சிக்கிக் கொண்டது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். அந்த வேப்பமரம் 23ஆம் எண்ணிலுள்ள வீட்டின் முன்புறத்தில் உள்ளது. திகைத்துக் கொண்டிருந்தபோது, முன்கண்ட அந்தப் பையன் வெளியே வந்து, "காற்றாடியா? கிளயில் அகப்பட்டுக் கொண்டதா?" என்று சொல்லி வெடுக்கென்று இழுத்தான். நூல் அறுந்ததே தவிரக் காற்றாடி வரவில்லை. எனக்குக் கோபம் வந்தது. "யாரடா நீ? உன்னைக் கூப்பிட்டேனா? எனக்கு இழுக்கத் தெரியாதா?" என்று உரக்கச் சொல்லி "மடையன், கழுதை" என்று என்க்குள் சொல்லிக் கொண்டேன். அதற்குள் அவனுடன் வந்த அம்மையார் வெளியே வந்து "என்ன அப்பா இது?” என்றார்கள். ஒன்றும் இல்லை அத்தை காற்றாடி சிக்கிக் கொண்டது; இழுத்தேன். நூல் அறுந்து விட்டது" என்றான்.

இத்தகைய நிகழ்ச்சி உத்திகளால் மட்டுமின்றி, வருணனைகள் மூலமும் கலைநுணுக்கங்களைக் கொண்டு தம் படைப்புகளுக்குக் கலைத்திறனை உருவாக்கியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/93&oldid=1224079" இருந்து மீள்விக்கப்பட்டது