பக்கம்:அறவோர் மு. வ.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

அறவோர் மு. வ.

நாம் வாழ்வதற்கு மூன்று நன்றாக இருக்க வேண்டும். ஒன்று நம் உள்ளம். மற்றொன்று உடம்பு; மூன்றாவது சுற்றுப்புறம்... நாம் விரும்பினால் உள்ளத்தை முழுவதும் நன்றாக வைத்திருக்க முடியும்; ஆனால் எல்லாரும் சேர்ந்து விரும்பினால்தான் சுற்றுப்புறத்தை நன்றாக அமைக்க முடியும்’ (வாடாமலர் 175.176)

பாத்திர கடை (உருவக நடை)

நாவலில் இடம்பெறுகின்ற பாத்திரங்களின் உரையாடல் வழியே வெளிப்படுகின்ற நடை என்பது அப்பாத்திரங்கள் வளர்ந்த, வாழ்கின்ற சூழலையும், பண்பு நலத்தையும் பொறுத்து அமைவதாகும். டாக்டர் மு. வ. சமுதாயத்தின் பல்வகை மாந்தரையும் காட்ட முயன்றுள்ளார்.

"நாளைக்கு வரும் பலாக்கனி இருக்கட்டும். இன்றைக்கு. வேண்டிய களாக்கனி எங்கே?" என்று சுமை உந்துவண்டி ஒட்டுநர் (லாரிக்காரர்) பேசுவதாக அமைந்த நடையில் உருவகம் நின்று பயில்வதோடு, சமுதாயத்தின் வழக் காற்றோடு - பாத்திரப் படைப்புக்கு ஏற்புடையதாய். அமைந்த பாங்கினைக் காண முடிகிறது.

உவமை

'உவமை' என்பது இலக்கியக் கூறாகக் கருதத்தக்கதாக அமைந்திருந்த போதிலும், டாக்டர் மு. வ. வின் நடையில் விரிந்து காணத்தக்கதாகும்.

டாக்டர் மு.வ. வின் நாவல்களில் பயின்று வருகின்ற உவமைகள் அலங்காரத் தன்மைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள இலக்கியக்கூறாக விளங்கவில்லை; புன்மை நிறைந்த சமுதாயத்தின் புழுதிநிலையைச் சமுதாயத்திற்கு வெளிப்படுத்துவதாகவும், பாத்திரங்களின் உணர்ச்சியைப் புலப்படுத்துவதாகவும், படைப்பாளரின் நோக்கத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/97&oldid=1224091" இலிருந்து மீள்விக்கப்பட்டது