பக்கம்:அறவோர் மு. வ.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

95

வாழ்க்கை நெறி விளக்குவதாகவும் டாக்டர் மு.வ. வின் உவமைகள் விளங்குகின்றன. பண்பாட்டின்- வெளிப்பாட்டையும், உளவியல் தன்மையையும் பழமொழியின் தாக்கத்தையும், இயற்கை மன ஒருமைப்பாட்டையும், மொழி இன இலக்கிய உணர்வின் ஆழத்தையும், காந்தியத் தின் தாக்கத்தையும் படைப்பாளரின் மன உணர்வையும், வாழ்க்கையின் பின்னணியையும், வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து நோக்கிய பார்வையையும், கலையின் தேவையையும் அவருடைய உவமைகளிலே காண முடிகிறது.

இயற்கையின் நியதி உவமை

டாக்டர் மு. வ. புரட்சிகரமான கருத்துகளால், சமுதாய மறுமலர்ச்சியில் நம்பிக்கை கொண்டவராக விளங்கியபோதிலும், இயற்கையின் நியதிகளுக்கு உடன் பட்டவர் என அவருடைய உவமைகள் உணர்த்துகின்றன.

“எல்லா மரமும் வாசற்காலாக, கதவாக, கூரைக் கழியாக ஆகமுடியாது. சில மரங்கள்தான் அப்படி அமைந்து வீட்டை உருவாக்கிக் காக்க முடியும். மற்றமரங்கள் வெயிலில் உலர்ந்து தீயில் வெந்து கரியாகத்தான் வேண்டும். பிறக்கும் பெண்கள் எல்லாம் குடும்பத் தெய்வங்களாக வாழ்ந்து விளங்க முடியாது. சிலர்தான் நெறியுள்ள மனைவியாக முடியும். சிலர்தான் அன்புருவ மான தாயாக முடியும். மற்றவர்கள் கண்டவர்களின் கையில் சிக்கிக் காமத்தியில் வெந்து கருக வேண்டியது.தான்'. (கயமை, ப. 192)

சமுதாய எதிரொலி உவமை

அங்கதத் தன்மையில் இயற்கையின் நிலையைக் குறிப்பிடும் போது, சமநிலையில்லாச் சமுதாயச் சீர்கேட்டைப் புலப்படுத்துகிறார் டாக்டர் மு. வ. சமுதாயமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/98&oldid=1235000" இலிருந்து மீள்விக்கப்பட்டது