74
நித்தியன் வேண்டுகோள்
"அண்ணியைப் போன்றே நீயோ ரசகாய சூரி யாதற்
கெண்ணியின் றிங்கு வந்திவ் விதமெனை யெதிர்த்தா யென்றால்,
கண்ணியில் படநான் காட்டுக் கவுதாரி யன்று கண்ணே!
புண்ணிய மாகச் சற்றுப் போய்ச்சேருன் னிடத்துக்" கென்றான்.
வேடிக்கைப் பேச்சால் வேளை வீணெனல்
"தேடிக்கை தனிலே தேனீர் தித்திக்க ஏந்திக் கொண்டிம்
மாடிக்குக் கைகா லோடீ மல்லாடி யேறி வந்து
வேடிக்கை யாகத் தந்தால், வகைதொகை யின்றி வாளா
வேடிக்கை விளைவிக் கின்றீர் வேளைவீ ணாதற் கென்றாள்.
நித்தியன் தேனீர் தித்திக்கு மெனல்
"வானீரே! யென்றும் நீரே வாரிதீர் வழங்கு கின்றீர்!
கானீரே! யென்றும் நீரே கார்நீரே தருகின் றீர்!காப்
பூநீர ளான வென்றன் பொற்கொடி வேணி மட்டும்
தேனீரே யீவாள்; நெஞ்சே தித்திக்கும்; தெளிவீ" ரென்றான்.
ஒளிக்கென்றே யிருந்த செவ்வா யொண்முத்த மொளிர, ஒன்றிக்
'களுக்' கென்று சிரித்துக் கன்னி கைநீட்டக் களித்துப் பெற்றுக்
"கிளிக்கின்று கூட நெஞ்சில் கிளச்சியே னென்ன "அக்கா
விளிக்கின்ற குரலைக் கேளீர்; வில்லங்கம் விளைப்பீ" ரென்றாள்.
"தெய்வமே! தெய்வ முன்னைத் தேடியே விளிக்கும்! தீரச்
செய்தவ மில்லேன்; வேறு செயத்தக்க தில்லை; செல்நீ!
எய்தசொல் லம்பால், யானை எறும்பாகி யிருத்தல் கண்டோம்!
உய்தியுண் டுனக்கு முள்ளம் ஓர்ந்தொழு கிடுக!" வென்றான்.