பக்கம்:அறிவின் கேள்வி.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

இருக்கிறாரா? அப்படி ஒருவர் இருந்தால் உலகிலே ஏனய்யா இந்த அக்கிரமங்கள், அநியாயங்கள், உயர்வுதாழ்வுகள், கொடுமைகள்? இதையெல்லாம் நீர் ஆராய்ந்து பார்த்தது உண்டா? என்பன போன்ற கேள்விகளை முதன்முதலாக நாங்கள் துவக்கிட வில்லை. ஈரோட்டுப் பெரியாரோ, வேறு சிலரோ கிளப்பிவிடவில்லை. எவ்வளவோ காலமாக எத்தனை எத்தனையோ பேர்கள் பேசியும் எழுதியும் ஆராய்ந்து வருகிற பிரச்சனைகள்தான் இவை. பின் இன்று ஏதோ திடீரெனத் தோன்றிவிட்டது என மயங்குவானேன்?

கடவுளைப்பற்றிச் சந்தேகிக்கத் தொடங்கினால், புகை உள்ள இடத்தில் தீயுண்டு என அனுமானிப்பது போல உலகில் உள்ள சிருஷ்டிப் பொருள்களை யெல்லாம் கானும் பொழுது, இவற்றை ஆக்கிய ஒருவன் இருக்க வேண்டும் என்று அனுமானிப்பது அவசியம் தானே? என்கிறார்கள், அவர் எங்கே, எப்படியிருப்பார் என்றெல்லாம் கேட்டவர்களுக்கு ‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ என்று சொல் அம்மானை வீசினார்கள். மனிதர்களைப் போலவே இருப்பான் என்கிறார்கள்.

‘புரிந்துகொள்ள முடியாத மர்மசக்திதான் என்னவோ அது எனக்குத் தெரியவில்லை. அதை, கடவுள் என அழைக்க நான் விரும்பவில்ல. ஏனெனில் கடவுள் என்பதற்கு மக்களிடையே நான் நம்பிக்கை கொள்ளாத எவ்வளவோ பொருள் ஏற்பட்டுவிட்டது. மனித உருவிலே கடவுள் அல்லது உயர்ந்த ஒரு சக்தி உண்டு என் எண்ணக்கூட முடியவில்லை என்னால். இப்படிப் பலர் என்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற,

விஷயமே எனக்கு முடிவிலா விந்தையாகக்தான் விளங்குகிறது.’

.