பக்கம்:அறிவின் கேள்வி.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


ஆட்களை மதிப்பவன் அல்ல அவன். ஆத்மாக்களை அளவிடுபவன் ஆண்டவன். பாபம் அவன் போடுகிற எடை ஆனால், அறியாதவன் செய்த பாபங்கள் மன்னிக்கப்படும். அறிவொளி பெற்றவன் செய்த பாபங்களுக்கு தீர்ப்பின்படி கடுமையான தண்டனையாம்...

இதை நாம் அலசிப் பார்த்தவரை, இது மிகவும் நியாயமான சித்தாந்தம்தான் என்று தோன்றும். ஆனால், இது எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கும், ஆனால் இதன் தன்மையென்ன என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்தால், மடத்தனத்தின் எல்லைக்கேயிது நம்மை கொண்டுசேர்க்கும்.

முட்டாள்களின் ஆத்மா-அவர்கள் செய்த பாபங்களுக்கும் பொறுப்பில்லையாகையால்-நேரே சொர்க்க லோகம் போக முடியும். கதே, ரூஸோ போன்றவர்களது ஆத்மாக்கள் நிரந்தரமாய் நின்றெறியும் நரகத் தீயிலே கறுக வேண்டும். ஆகவே, ஒரு கதேயாகவோ, ஒரு ரூஸோவாகவோ பிறப்பதைவிட, ஒரு மடையனாகப் பிறந்து வாழ்வது மேலானது. அப்படித்தானே? என்ன பேதமையிது!

ஆத்மாவின் அமரத்துவமும், என்றோ கிட்டுவதற்காக காத்திருக்கும் இன்பமும், இன்று பூமியிலே கஷ்டப்படுகிறவர்களுக்கு எவ்விதத் தவறும் செய்யாதவர்களுக்குச் சரியான மாற்று என்று சொல்லப்படுகிறது. உண்மையில் அதுமாதிரி ஒன்றுமில்லை இந்த சித்தாந்தம் தீமை எப்படிப் பிறந்தது, உலகில் ஏன் தீமை நிலவுகிறது என்றெல்லாம் விளக்கக் காணோம். அப்பாவியான, செயல் திறன் எதுவுமற்ற, குழந்தை இந்த உலகுக்குத் தள்ளப்படுகிறது. யாருக்கும் எவ்விதத் தீங்கும் நினைக்கவில்லை அது. என்றாலும் மிகக் கொடிய முறையிலே அந்தச் சிசு சித்திரவதை