பக்கம்:அறிவின் கேள்வி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 செய்யப்படுகிறது பாபத்தில், குற்றத்தில், வியாதிகளில் போட்டு வதக்கி எடுக்கப்படுகிறது. இவற்றாலேயே வளர்க்கப்படுகிறது. இப்படிச் சிலகாலம் வாழ அனுமதிக்கப்பட்டு பின் சாகடிக்கப்படுகிறது.

ஐயா, உடனடியாக அது அந்தரத்துச்சுந்தர சொர்க்கலோகத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று சொல்வது ரொம்ப சரி. ஏனய்யா அதை முதலிலேயே இன்பபுரிக்கு நேராக அழைத்துச் சென்றிருக்கப்படாது? ஒருவனுக்கு ஒரு குழந்தை இருக்கிறது; காரணமில்லாமல் அவன் அதை உதைக்கிறான். அப்புறம் மிட்டாயும் ஷர்பத்தும் அதற்கு கொடுக்கிறான் என்பதனால் அவன் செய்த அநியாயம் சரிப்பட்டு போகுமா?
.
ஆகவே'ஆக்கியோன் எனப்படுகிற ஆசாமியின் குணத்தை நாம் ஆராய வேண்டியது அவசியமாகிறது. இறைவன் என்று மக்களால் போற்றப்படுகிற பண்பையே நாம் ஆராய்கிறோம் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்..

மிக உயர்ந்த கடவுளுக்கு மனம் உண்டு என்கிறார்கள். இதை தாம் ஆட்சேபிக்கிறோம். நல்லதுக்காகவே இப்படி கண்டிக்கிறோம் என்று காட்ட இருப்பதாகச் சொல்லப்படுகிற அந்த மனதைப் பற்றி விமர்சிப்போம்..

முதலில் மனிதர்களை அவர்களது நலத்துக்காக அல்லாமல் வேறு எதற்காகவும் சிருஷ்டிக்க கடவுளுக்கு உரிமை கிடையாது என்று மறுக்க முடியாத தார்மீகமான ஒரு முக்கிய பிரச்னையை ஆணித்தரமாக அறைகிறோம். இது விசித்திரமான வாதம் என்று உமக்குத் தோன்றலாம். ஆனால், நீர், பகினாலாவது லூயி காலத்திலே பிரான்சில் இருந்திருப்பீராயின், மக்களுக்காகத் தான் மன்னனே