பக்கம்:அறிவின் கேள்வி.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிர்ப்புகளையும் கண்டு மனம் தளராது அவிறின் பாதையில் சிந்தனை தீபம் ஏந்தி முன்னேற விரும்புகிறவர்கள் இன்னும் நம்மிடையே உண்டு. இனியும் இருப்பார்கள்.

‘சிந்தியுங்கள்!’ ‘சித்தனைத் தீப்பொறி சிதறுவோம்; அதனின்றும் அறிவொளி பெருகட்டும் திக்கெல்லாம் பரவட்டும் சிந்தனைச் செந் தீ’ என்று லட்சிய வெறியோடு உழைத்து வருகிற ஒரு சிலரிலே ஒருவர்தான் கோரநாதன்.

நண்பர் கோரநாதனை உங்களுக்கு நன்றாக தெரியும். ‘கோயில்களே மூடுங்கள்!’ ‘சினிமாவில் கடவுள்கள்’ ‘ஈட்டி முனை’ ‘எப்படி உருப்படும்!’ ‘கொடு கல்தா’ ஆகிய தீப்பொறி களைத் தந்த கோரநாதன் இன்னும் பல எண்ணை மணிகளை அறிவின் சுடர்களை, சிந்தனைக் கனல்களை தமிழுலகுக்கு அளிக்க எண்ணியிருக்கிறார். அந்தப் புதிய வரிசையின். முதல்ச் சுடர்தான் ‘‘அறிவின் கேள்வி’’

மனித குலத்தின் தவறுகளையும், சமுதாயத்தின் சிறுமைகளையும், வாழ்வின் வஞ்சனைகளைம், ஊழல்களையும் உணர்ந்து குமுறிக் கொதிக்கும் எரிமலை உள்ளத்தாராய் கோரநாதனின் எண்ணமும், எழுத்தும் சுடும் நெருப்புப் பொறிகளேயாகும் என்பது நீங்கள் அறிந்ததே. இந்தப் புத்தகமும் இனிவரும் நூல்களும் இதையே நிரூபிக்கும்.

- பதிப்பகத்தார்