பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/49

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
47

மைகள் மீதான விளைவு. இந்த விளைவினால் (இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய) சில ஆற்றல் புலங்கள் பூமியின் ஈர்ப்புவிசையினை நீத்தறவு செய்துவிடும் அல்லது குறைத்துவிடும்

antihunt device: (மின்) நடுக்கத் தடைச் சாதனம் : நடுக்கத்தைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் அல்லது மின்சுற்று வழி

னுக்கேற்ப தரம் பிரித்தல் கல்லெண்ணெயின் (பெட்ரோல்) ஆக் டேன் (தர அளவீட்டு எண்)

antilogarithm : (கணி,) எதிர் அடுக்கு மூலம்: ஒரு குறிப்பிட்ட அடுக்கு மூலத்திற்கு இணையான எண்

antimíssile missile : (விண்,) ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை : பறந்துவரும் மற்ற ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கக் கூடிய ஒரு தற்காப்பு ஏவுகணை

antimonial lead : (உலோ. ) ஆன்டிமணி ஈயம்: 90%-96% ஈயமும், 4%-10% ஆன்டிமணியும் அடங்கிய ஓர் உலோகக் கலவை. இது சேம மின்கலத் தகடுகளுக்குப் பய்ன்படுத்தப்படுகிறது

antimony: (உலோ) ஆன்டி மணி: நீலச்சாயல் வாய்ந்த வெண்ணிறப் படிக உலோகத் தனிமம். இது எளிதில் உடையும் தன்மையுடையது. வெள்ளீயத்துடன் அல்லது ஈயத்துடன் கலக்கும் போது கடினத் தன்மை பெறுகிறது. இது பெரும்பாலும் உலோகக் கலவையாகப் பயன்படுத்தப்படுகிறது

antimony - (வரைக.) அஞ்சனக்கல் : எளிதில் உடையும் இயல்புடைய நிலச்சாயல் வாய்ந்த வெண்ணிறத் தனிமம். இது குளிர்விக்கும்போது சுருங்குவ்தில்லை. எனவே இது எழுத்துருக்களுக்கு வலிமையூட்டப் பயன்படுத்தப்படுகிறது

antinode : (மின்) நள்ளிடைக் கணு: மின்னோட்டத்தின் அல்லது மின்னழுத்தத்தின் உச்ச அளவு அலைப்புடைய மையப்பகுதி

antipercolator: (தானி): கசிவுத் தடுப்பான்: ஓர் எரி-வளி கலப்பியின் உயர்வேக மின்சுற்று வழியில், அளவுக்கு மீறிய வெப்பம் காரணமாக உண்டாகும் ஆவி அழுத்தத்தினைத் தளர்த்துவதற்குரிய ஒரு சிறிய இடைவெளி

antique : தொன்மைக் காகிதம் / திண்மை அச்சுரு: (1) முட்டையின் வெண்தோடு போன்ற மெருகிடப்படாத முரட்டு ரகக் காகிதத் தயாரிப்பு (2) முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுரு வகை (அச்சுக் கலை) பொதுமுறை அச்சுரு வகை, சாய்ந்த அச்சுருவகை இரண்டிலும் திண்மையான முகமுடைய அச்சுரு

antisatellite missile :(விண்) செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணை: வட்டப்பாதையில் சுற்றி வரும் ஒரு செயற்கைக் கோளை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் ஏவுகணை

antiseptic: (நோயி) நோய் நுண்மத் தடை : காயங்கள் முதலியவற்றில் நோய் நுண்மங்கள் உருவாவதைத் தடுக்கப் பயன்படும்