பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

நம் அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அறிவியல் அழுத்தம் பெற்று வருகிறது. அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவத்துறைகளின் துணையின்றி அறவே இயங்க முடியா நிலை. அதற்கேற்றாற்போல் நம் மக்களிடையே அறிவியல் அறிவு வளர்ச்சியும் உணர்வும் கண்ணோட்டமும் பெருகியுள்ளதா என்றால் போதிய அளவு இல்லை என்றே கூறவே வேண்டியுள்ளது. அதிலும் படிக்காதவர்களிடையேயும் படிப்பை பள்ளியில் பாதியில் விட்டவர்களிடையேயும் இந்நிலை இரங்கத்தக்க அளவிலேயே உள்ளது. என்பது மிகவும் வருந்தத்தக்க நிலையாகும். அதிலும் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் தமிழ் பயிற்சி மொழியாக உயர்கல்வியாயமையாத காரணத்தால் தாய்மொழி மூலம் அறிவியல், தொழில் நுட்ப, மருத்துவக்கல்வி பெறுவது இயலாததொன்றாக உள்ளது. இத்தகு போக்கால் தமிழில் இத்துறை தொடர்பான நூல்களும் போதிய அளவில் எழுதப்பட்வில்லை. எழுத முனைவோருக்கும் கலைச்சொல் சிக்கல். எனவே, ஒரளவு தமிழறிவு உள்ளவர்களுக்கும் தமிழில் அறிவியல் தொடர்பான நூல் எழுத விழைவோருக்கும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதே இக் கலைச்சொல் களஞ்சிய அகராதி நூல்.

இந்நூல் வேறு சில நோக்கங்களையும் உட்கொண்டே தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரண கலைச்சொல் அகராதியிலின்றும் இஃது சற்று வேறுபட்டது. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்க்கலைச் சொற்களைக் கொடுப்பதை விட அச்சொல்லின் செயற்பாட்டு வினை சற்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அகராதித் தன்மையும் கலைக் களஞ்சியப் போக்கும் ஒருருக்கொண்ட ஒரு புதுவகை நூலாகும். இதன் மூலம் படிப்போர் எளிதில் சொற்பொருள் விளக்கம் பெறமுடிகின்றது. இதனால் இதனினும் சுருங்கிய வடிவிலான சொற்செட்டும் பொருட் செறிவுமுடைய நயமிக்கக் கலைச்சொற்களை ஆர்வமுடையவர்கள் நாளை உருவாக்க வழியேற்படலாம்.

அது மட்டுமின்றி, ஒவ்வொரு கலைச் சொல்லின் வாயிலாக அறிவியல் தகவல்கள்களைத் துணுக்குச் செய்திகளாக வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்பது எனது நோக்கமாகும். ஏனெனில், இன்றையச் சூழ்நிலையில் விரிவான அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவச் செய்திகளைக் கட்டுரைகள் வாயிலாகப் படித்தறியும் பொறுமையும் நேரமும் மிகக் குறைவாகவே உள்ளது. அவற்றை ஒரு சில வரிகளில் செய்தித் துணுக்குகளாகத் தரும்போது ஒரு சில விநாடிகளில் படித்தறிய மனம் அவாவுவது இயல்பு. அவ்வகையில் அறிவியல் செய்தி களை வாசகர்கட்கு வழங்கவே இந்நூல் கலைக் களஞ்சிய வடி