பக்கம்:அறிவியல் அகராதி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

con

100

cop


contractile vacuole - சுருங்கு குமிழி: பலமுன் தோன்றிகளில் காணப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட படல எல்லையுள்ள குழிகள். ஊடுபரவழுத்தத்தைச் சீராக்குபவை, எ-டு. அமீபா. (உயி)

control grid - கட்டுப்பாட்டுத்தடுவாய்: ஒரு எதிர்மின்வாய்க்கதிர்க் குழாயில் நேர்மின்வாய்க்கும் எதிர்மின்வாய்க்கு மிடையே வைக்கப்படும் கம்பிவலை மின்வாய். ஒரு வாயிலிருந்து மற்றொரு வாய்க்கு மின்னணுக்கள் செல்வதை இது கட்டுப்படுத்துவது. (இய)

convection - வெப்பச்சுழற்சி: வெப்பச் சலனம் வெப்பம் பரவும் முறைகளில் ஒன்று. இது பரவ ஊடகம் தேவை. வெற்றிடத்தில் பரவாது. (இய)

convergence - குவிதல்: ஒத்த குழ்நிலையில் வாழ்வதால், தொடர்புடைய வகைகளுக்கிடையே காணப்படும் ஒற்றுமை.(உயி)

convergent evolution, convergence - குவி உயிர்மலர்ச்சி: ஒத்த சூழ்நிலைகளில் வாழ்வதால் உறவிலா உயிரிகளுக்கிடையே ஒத்த உறுப்புகள் உண்டாதல். எ-டு. பூச்சிகள், முதுகெலும்பிகள் ஆகியவற்றின் சிறகுகள். பா. parallel evolution. (உயி)

converter - மின்மாற்றி: இரு திசை மின்னோட்டத்தை ஒரு திசை மின்னோட்டமாக மாற்றுங் கருவியமைப்பு. (இய)

convex lens - குவிவில்லை: இது நடுவில் தடித்தும் ஒரங்களில் மெலிந்தும் இருக்கும். ஒரு நிலையில் மட்டும் மாயபிம்பம் விழும். ஏனைய ஐந்து நிலைகளில் உண்மை பிம்பமே உண்டாகும். இது நுண்ணோக்கி, தொலைநோக்கி, திரைப்பட வீழ்த்தி, முக்குக் கண்ணாடி முதலியவற்றில் பயன்படுவது. (இய)

convex mirror - குவியாடி: இதில் மறிக்கும் பரப்பு குவிந்திருக்கும். எப்பொழுதும் மாய பிம்பம் விழும். பேருந்தில் பின்வரும் பிம்பங்களைக் காட்ட ஒட்டுநருக்கு முன் இருப்பது. (இய)

copper - செம்பு: Cu. தாமிரம். சிவந்த மாநிற உலோகம். கம்பியாக்கலாம். தகடாக்கலாம். வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதில் கடத்துவது. பித்தளை, வெண்கலம், வெடிகுழல் உலோகம் முதலிய உலோகக் கலவைகள் செய்யவும் மின்கம்பிகள் அணிகலன்கள் செய்யவும் பயன்படுவது. இதன் சல்பேட் பூச்சிக்கொல்லி. இதன் அய்டிராக்சைடு சுவைட்சர் வினையாக்கி செய்யப் பயன்படுவது. (வேதி)

copulation - புணர்ச்சி: இது பால்புணர்ச்சி. இதில் ஆண் பெண் விலங்குகள் இரண்டும் தற்காலிகமாகச் சேர்ந்து ஆணிலிருந்து பெண்ணிற்கு விந்து