பக்கம்:அறிவியல் அகராதி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cre

105

cri


களில் சுறுசுறுப்பாக இயங்கும் விலங்கு எ-டு. விட்டில் பூச்சிகள், கொசு. (உயி)

crest - முகடு: ஓர் ஒலிஅலையின் மேட்டுப் பகுதி. (இய)

cretinism - குருளைமை: குருளைத் தன்மை தொண்டையடிச் சுரப்பி. சரியாக வேலை செய்யாவிடில், குழந்தைகளிடத்து ஏற்படும் குறைநோய். வளர்ச்சி குன்றி, 15 வயதுடையவர் 3 வயது குழந்தை போல் இருத்தல். (உயி)

cristae - விரலிகள்: விரல் போன்ற நீட்சிகள். உயிரணுவிலுள்ளன. இழையனின் உட்படலம் இம்மடிப்புகளாலானது. (உயி)

cristobalite - கிரிஸ்டோபலைட்: சிலிக்கன் ஆக்சைடின் கனிம வடிவம். (வேதி)

critical angle - மாறுநிலைக் கோணம்: அடர்மிகு ஊடகத்தில் எப்படுகோணத்திற்குச் சரியாகக் காற்றில் விலகுகோணம் 90° ஆகவிருக்கிறதோ அப்படுகோணம் அந்த ஊடகத்தின் மாறுநிலைக் கோணமாகும். எ-டு. நீரின் மாறுநிலைக் கோணம் 48.5°. வைரம் 2455° (இய)

critical mass - மாறுநிலைப் பொருண்மை: அணுவினையில் தொடர்வினையினை நிலைநிறுத்தத் தேவைப்படும் பிளவுப் பொருள்களின் குறைந்தஅளவு மாறுநிலைப் பொருண்மையாகும். பொருண்மையை நிறை என்றுங் கூறலாம். (இய)

critical pressure - மாறுநிலை அழுத்தம்: தன் மாறுநிலை வெப்பநிலையில், ஒரு வளியை நீர்மமாக்கத் தேவைப்படும் குறைந்த அளவு அழுத்தம். (இய)

critical reaction - மாறுநிலை வினை: அணுக்கருத் தொடர் வினை (இய).

critical state - மாறுநிலை: பாய்மநிலை. இதில் நீர்மமும் வளியும் இரு நிலைகளும் ஒரே அடர்த்தி கொண்டிருக்கும். இப்பொழுது பாய்மமே மாறுநிலை வெப்பநிலை, அழுத்தம், பருமன் ஆகியவற்றில் இருக்கும். (இய)

critical temperature - மாறுநிலை வெப்பநிலை: அழுத்தத்தைப் பயன்படுத்தி, எவ்வெப்பநிலைக்குக் கீழ் ஒரு வளியை நீர்மமாக்க இயலுமோ அவ்வெப்பநிலை. அவ்வெப்பநிலைக்கு மேல் வெப்பம் எவ்வளவு மிகினும், அவ்வளியை நீர்மமாக்க இயலாது. அறைவெப்ப நிலைக்கு மேல் சில வளிகளுக்கு இவ்வெப்பநிலை உள்ளது. எ-டு. கரி இரு ஆக்சைடு 311 செ. வெப்ப நிலைக்குக் குறைந்த மாறுநிலை வெப்பநிலை வகைகளும் உண்டு. எ-டு. உயிர்வளி 118° செ. (இய)

critical volume - மாறுநிலைப் பருமன்: தன் மாறுநிலை வெப்ப நிலையிலும் அழுத்தத்திலும் ஒரு பொருளின் ஓரலகுப் பொருண்மை அடைத்துக் கொள்ளும் பருமன். (இய)