பக்கம்:அறிவியல் அகராதி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Cro

106

cry


Cromagnon man - குரோமக்னன் மனிதன்: தற்கால மனிதன் முதல் தோற்றம்: ஓமோ சேப்பியன்ஸ். 35,000 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் தோற்றம் ஏற்பட்டது. (பு.அறி)

crop - தீனிப்பை: உணவு வழியின் விரிந்த முன்பகுதி. இதனை முதல் இரைப்பை எனலாம். உட்கொண்ட உணவுப் பொருளை இது சேமித்து வைப்பது. எ-டு. பூச்சிகள், பறவைகள். (உயி)

cross - கலப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட இரு தனி உயிரிகளுக்கிடையே நடைபெறும் இணைவு. (உயி)

crossing over - குறுக்குக் கலப்பு: குறுக்கு (சியாஸ்மேட்டா) தோன்றுவதன் வாயிலாக அதன் மூலம், ஓரக நிறனியன்களுக்கிடையே (ஓமலாகஸ் குரோமடிட்ஸ்) ஏற்படும் பொருள் பரிமாற்றம். இவ்வரிய நிகழ்ச்சி கண்ணறைப் பிரிவில் நடைபெறுவது. இதனைப் புகழ் வாய்ந்த அமெரிக்க உயிரியலார் மார்கன் தாம் செய்த கனிஈக்கள் ஆராய்ச்சியின் வாயிலாகக் கண்டறிந்தார். (உயி)

cross section - குறுக்குவெட்டுப் பகுதி: ஒரு பொருளைக் குறுக்குவாட்டில் வெட்டுவதால் உண்டாகும் பகுதி. (உயி)

crucible - புடக்குகை: பொருள்களை உயர் வெப்பநிலைக்குச் சூடாக்கும் பீங்கான் கிண்ணம். (வேதி)

crude oil - பண்படா எண்ணெய்: பெட்ரோலியம். (வேதி)

crust - தோடு: 1. ஒரு பொருளின் கடின வெளிப்பகுதி 2. ரொட்டியின் வெளிப்பகுதி 3. கனி உறை 4. நிலவுலகின் கெட்டியான வெளிப்பகுதி. உயிர்வாழத் தகுதியுள்ளது.

cryobiology - தண் (குளிர்) உயிரியல்: உயிரிகளின் கடுங்குளிர் விளைவுகளை ஆராய்வது.

cryogen - குளிராக்கி: உறை கலவை.

cryogenic engine - குளிர் எந்திரம்: ஏவுகணையின் மேல் அடுக்கில் பயன்படுவது.

cryogenics - தண்ணியல் குளிரியல்: மிகக் குறைந்த வெப்பநிலைகளை உண்டாக்குதல். அவற்றின் இயற்பியல் தொழில் துணுக்க விளைவுகளை ஆராய்தல் ஆகியவை பற்றிக் கூறுந்துறை. 20ஆம் நூற்றாண்டின் இளைய அறிவியல். குறைந்த வெப்பநிலை என்பது 150 செ. க்குக் கீழுள்ள வெப்பநிலை. தனிச்சுழி வெப்பநிலை குளிரியலுக்குரியதே. இதை நிலவுலகில் அடைய இயலாது. (இய)

cryptogams - மறைகலவித் தாவரங்கள்: பூக்காத் தாவரங்கள். தாவர இனத்தின் பெரும் பிரிவு. மூன்று பிரிவுகளைக் கொண்டது. 1. தண்டகத் தாவரங்கள் (தேலோபைட்டா): கிளமிடோமோனாஸ், 2. பாசிகள் (பிரையோபைட்டா)