பக்கம்:அறிவியல் அகராதி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cyc

110

cyt


cyclone tracking - புயல்வழியறிதல்: திரட்டிய வானிலைச் செய்திகளைக் கொண்டு புயல் எவ்வாறு உருவாகி மேல் நகர்ந்து செல்லும் என்பதை அறிந்து, அதன் தீச்செயலை அறிவித்தல். இதற்குச் செயற்கை நிலாக்கள் தற்பொழுது பெரிதும் பயன்படுகின்றன. தமிழ்நாட்டுக்கு நவம்பர் திங்கள் புயல் மாதமாகும். (பு.அறி)

cyclopropane - சைக்ளோ புரோப்பேன்: C3H6 இனிய மணமுள்ள நிறமற்ற வளி, மயக்கமருந்து. (வேதி)

cyclosis - சுழலியக்கம்: கண்ணறைக் கணியத்தின் தொடர்ந்த ஒழுங்கான இயக்கம். உட்கரு முதலிய பொருள்கள் இதில் வீறற்ற நிலையிலேயே உள்ளன. (உயி)

cyclosporine - (F - 5061) சைக்ளோஸ்போரின்: தடுப்பாற்றலை ஒடுக்குவது. மருத்துவ வேதிப்பொருள். இதன் கண்டுபிடிப்பு பதியஞ் செய்யும் உறுப்புகள் தள்ளப்படுவதைத் தவிர்க்க உதவுவது. (மரு)

cyclotron - சுழலியன்: அணுவிரை வாக்கி: முன்னணு முதலிய நேர் மின்னேற்றம் பெற்ற துகள்களை விரைவாக்கும் கருவியமைப்பு. அணு ஆராய்ச்சிக்குப் பயன்படுவது.

суmе - குறுமம்: குறும்பூக்கொத்தில் ஒரு வகை. எ-டு, பூவரசு. (உயி)

cymose inflorescence - குறுமம்: பா. inflorescence. (உயி)

Cyst-பை, கட்டி: உயிர்ப்பொருள் தொகுதியைச் சுற்றிச் சுரக்கப்படும் கடின உறை. தடித்த சுவருள்ள ஓய்வுச்சிதல். (உயி)

cytochemistry - கண்ணறை வேதிஇயல்: உயிரணுக்களின் வேதிச் செயல்களை ஆராயுந்துறை. (உயி)

cytode - கருவிலி: கருவிலா முன்கணியம். (உயி)

cytogenetics - கண்ணறை மரபணுவியல்: மரபுவழித் திறனோடு நிறப்புரியின் அமைப்பையும் நடத்தையையும் தொடர்பு படுத்துவதை ஆராயுந்துறை. (உயி)

cytokinesis - கண்ணறைக் கணியப் பிரிவு: உயிரணுவில் கருப்பிரிவைத் தொடர்ந்து கண்ணறைக் கணியம் பிரிதல். (உயி)

cytokinins - சைட்டோகினின்கள்: தாவரங்களில் கண்ணறைப் பிரிவைத் துண்டும் வளர்ச்சிப் பொருள்கள். (உயி)

cytology - கண்ணறைவியல்: உயிரணுக்களையும் அவற்றின் பகுதிகளையும் அமைப்பு நோக்கிலும் வேலைநோக்கிலும் ஆராயுந்துறை. (உயி).

cytolysis - கண்ணறைச் சிதைவு: கண்ணறைகளின் மேற்படலம்