பக்கம்:அறிவியல் அகராதி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



dec

115

def


னுள்ள பற்கள் ஓ. permanent teeth. (உயி)

decimal system - தசமமுறை: பத்தின்முறை. எண் 10 அடிப் படையில் அமைந்த எண் முறை. இதுவே பொதுவழக்கிலுள்ளது. மதிப்பை மாற்றுவது எளிது. (கணி)

declination, angle of - அச்சு விலகு கோணம்: ஒரிடத்தில் புவியின் அச்சுக்கும் காந்தஅச்சுக்கும் இடையே உள்ள கோணம். இது புவியின் ஒவ்வோரிடத்திலும் கணக்கிடப்பட்டுள்ளது. (இய)

decomposer - சிதைப்பி: இறந்த கரிமப்பொருட்களைச் சிதைக்கும் குச்சியங்கள் (உயி).

decomposition - சிதைவு: (வேதி)

decompound - மீக்கூட்டிலை: இது மும்மடங்குச் சிறகுக் கூட்டிலை. முருங்கை. (உயி)

decumbent - கிடைத்தண்டு: தரைமேல் கிடக்கும் தண்டு. அதன் முனை மேல் உயர்ந்திருக்கும்: நெருஞ்சி. (உயி)

decurrent - தண்டுக்கீழடி: இலையடி, தன் பொருந்து புள்ளிக்கு அப்பால் தண்டுக்குக் கீழ் விரிதல். (உயி)

decussate - குறுக்கு மறுக்கு இலையமைவு: இதனை ஈரிலை அமைவு எனலாம். ஒரு கணுவில் இரண்டு இலைகள் மட்டுமே இருக்கும். எருக்கு

defaecation - கழிவகற்றல்: இறந்த அணுக்கள், குச்சியங்கள், செரிக்காத உணவு ஆகியவை உணவு வழியிலிருந்து வெளியே செல்லுதல். (உயி)

defect - குறைபாடு: படிகப் பின்னல் அமைவில் துகள்களின் கட்டுக்கோப்பான அமைப்பில் காணப்படும் ஒழுங்கின்மை. புள்ளிக் குறைபாடுகள், வரிக்குறைபாடுகள் என அது இரு வகைப்படும். (வேதி)

defects of image - உருக்குறைபாடுகள்: இவை நிறப் பிறழ்ச்சயும் கோளப்பிறழ்ச்சியும் ஆகும். முன்னதைக் கிரவுன் கண்ணாடியிலான குவி வில்லையையும் பிளிட் கண்ணாடியிலான குழி வில்லையையும் பயன்படுத்திப் போக்கலாம். பின்னதை வட்ட அல்லது வளை வடிவத் தடைகளைப் பயன்படுத்தியும் குறுக்கு வட்டமான வில்லைகளைப் பயன்படுத்தியும் போக்கலாம். (இய)

deficiency diseases - குறை நோய்கள்: ஊட்ட உணவில் வைட்டமின்கள் குறையும் பொழுது ஏற்படும் நோய்கள். காட்டாக, வைட்டமின் பி குறைவதால் பெரிபெரி நோய் ஏற்படும். (உயி)

defoliant - இலையுதிர்தூண்டி: இலைகள் இயல்பாக உதிர்வதற்கு முன்னரே உதிரச் செய்யும் வேதிப்பொருள். (உயி)